கைவசம் ஒரே ஒரு படம்.... சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வந்த நந்திதா!
நடிகை நந்திதா கைவசம் 'எம்.ஜி.ஆர்' மகன் என்கிற ஒரு படம் மட்டுமே உள்ள நிலையில், தற்போது பிரபல சன் டிவி சீரியலில் சிறப்பு தோற்றத்தில் இவர் நடிக்க உள்ளார். இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக புரோமோவும் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, "இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் சூப்பர் ஹிட்டானது. அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.

பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார்.

இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். அதன் பின்னர் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை காட்டும் விதமா ஐபிசி 376 படத்தில் காக்கிச் சட்டை அணிந்து கெத்தான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.

என்ன தான் திறமை இருந்தாலும் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்ததால் நந்திதாவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதனால் ரூட்டை மாற்றிய நந்திதா விதவிதமான ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும். தற்போது இவரது கை வசம் எம்.ஜி.ஆர் மகன் என்கிற ஒரு படம் மட்டுமே உள்ளது. இந்நிலையில், திடீர் என சீரியலில் தோன்றி சர்பிரைஸ் கொடுத்துள்ளார். சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அபியும் நானும்' சீரியலில் தான் இவர் சிறப்பு விருந்தினராக நடிக்க உள்ளார்.

ஒரு மணிநேர ஸ்பெஷலாக ஒளிபரப்பாகும் இந்த சீரியல் வரும் ஞாயிற்று கிழமை 2 மணிமுதல் 3 மணிவரை ஒருமணி நேரம் ஸ்பெஷல் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த வாரம் 'கண்ணான கண்ணே' சீரியல் ஒரு மணிநேரம் ஒளிபரப்பான போது, அதில் கணேஷ் வெங்கட்ராம், மற்றும் ரியாஸ் கான் உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.