- Home
- Cinema
- Christmas: குஷ்பு, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட... பல பிரபலங்கள் கொண்டாடிய கிறிஸ்துமஸ் போட்டோஸ்!
Christmas: குஷ்பு, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட... பல பிரபலங்கள் கொண்டாடிய கிறிஸ்துமஸ் போட்டோஸ்!
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் (Christmas) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபலங்கள் பலர்... கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

ஸ்லிம் ஃபிட் அழகியாக மாறி, விதவிதமாக போஸ் கொடுத்து கலக்கி வரும் குஷ்பு... அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இந்த கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடியுள்ளார்.
குழந்தை போல் கியூடாக இவர் கொடுத்துள்ள போஸ், வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இவரை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகன் ஐஸ்வர்யா தனுஷ், தன்னுடைய மகனுடன் இந்த கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
அதே போல் தன்னுடைய தங்கை... சௌந்தர்யாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் இவர் வெளியிட்டுள்ளார். இதில் இருவருமே மிகவும் கியூட்டான மாடர்ன் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளனர்.
எந்த செலிப்ரேஷன் என்றாலும், கவர்ச்சிக்கு குறைவில்லாமல் போஸ் கொடுத்து ரசிகர்களை ஹாட் மூடுக்கு மாற்றும் நடிகை ராய் லட்சுமி சிவப்பு நிற ஸ்லீவ் லெஸ் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
கியூட் சிரிப்பில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன்... தொப்பி ஒன்று அணிந்து, ராய் லட்சுமி வெளியிட்டுள்ள வேற லெவல் போட்டோ இது
தனுஷின் சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன்... தன்னுடைய குடும்பத்தினருடன் இந்த கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடியுள்ளார். பார்க்க பார்க்க அழகு குறையாமல் வெளியிட்ட புகைப்படம் இது
வாவ்... நடிகர் சிவகார்த்திகேயன் கூட இந்த சிற்ஸ்துமஸ் தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். கிறித்துமஸ் மரம் முன்பு நின்று மிகவும் ஸ்டைலிஷாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ...
டிக் டாக், டப் மேஷ் மூலம் பிரபலமாகி தற்போது அடுத்தடுத்து பல படங்களின் வாய்ப்புகளை கைப்பற்றி வரும் மிர்னாலினி சிவப்பு நிற வழுவழுப்பான உடையில் வெளியிட்ட கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படம் இதோ...
இவரை தொடர்ந்து, பிரபல சின்னத்திரை நடிகையும்... பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான ஷிவானி செம்ம ஹாட் கவர்ச்சி உடையில், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்லாக வெளியிட்ட புகைப்படம் இது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.