- Home
- Cinema
- ஸ்லிம் லுக்... படு மாடர்ன் உடையில் இளம் ஹீரோயின்களையே மிரளவைத்த நடிகை குஷ்பு! வேற லெவல் போட்டோஸ்!
ஸ்லிம் லுக்... படு மாடர்ன் உடையில் இளம் ஹீரோயின்களையே மிரளவைத்த நடிகை குஷ்பு! வேற லெவல் போட்டோஸ்!
நடிகை குஷ்பு படு ஸ்லிம் லுக்கில், சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தவர். அரசியலிலும் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விரைவில் குஷ்புவிற்கு பாஜக தலைமை மிக முக்கிய பொறுப்பை கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டி.வி. நிகழ்ச்சிகள், சினிமா, அரசியல் என படுபிசியாக இருந்தாலும் குஷ்பு பொறுப்பான குடும்பத் தலைவியாக தனது கடமைகளை தவறியதே கிடையாது. சோசியல் மீடியாவில் கூட கணவர் சுந்தர் சி, மகள்கள் அவந்திகா, அனந்திதா பற்றிய அப்டேடுகளையும், குடும்ப புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் குஷ்பு தனது இளைய மகளான அனந்திதா பட்டம் வாங்கிய புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். குஷ்புவின் உணர்ச்சிகரமான பதிவை படித்த ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்தனர். பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த குஷ்பு, தற்போது சின்னத்திரையில் ஒரு நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.இதில் ரஜினிக்கு குஷ்பு தான் ஜோடி என்றும், இல்லை வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் குஷ்பு தன்னுடைய சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொழு கொழு லுக்கில் இருந்த குஷ்பு தேர்தலுக்கு முன்பிருந்தே உடல் எடையை குறைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியது பலரும் அறிந்த செய்தி. தற்போது அதன் பலனாக குஷ்பு சிக்கென ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். டீன் ஏஜ் மகளுக்கே சவால் விடும் விதமாக 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னி லுக்கிற்கு மாறியுள்ளார்.
படு மாடர்ன் லுக்கில், தற்போதைய முன்னணி நடிகைகளையே மிரளவைக்கும் விதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
kushpoo
எப்போதும் சேலையில் விதவிதமாக, போஸ் கொடுக்கும் குஷ்பு இப்படி மாடர்ன் உடைக்கு மாறி கொடுத்துள்ள போஸில் அச்சு அசல் ஹீரோயின் போலவே ஜொலிக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.