- Home
- Cinema
- Kushboo: 20 வயசு ஹீரோயின் போல் மாறி... நயன்தாரா - தீபிகா படுகோனை ஓவர் டேக் செய்த குஷ்பு! வேற லெவல் போட்டோஸ்!
Kushboo: 20 வயசு ஹீரோயின் போல் மாறி... நயன்தாரா - தீபிகா படுகோனை ஓவர் டேக் செய்த குஷ்பு! வேற லெவல் போட்டோஸ்!
நடிகை குஷ்பு (khushbu) சும்மா 20 வயது யங் ஹீரோயின் லுக்கிற்கு மாறி, அவ்வப்போது தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக தினுசு தினுசாக புகைப்படம் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

80களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த நடிகை குஷ்பு தற்போது, 40 வயதை கடந்த பின்னரும் 20 வயது ஹீரோயின் லுக்கிற்கு மாறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
அன்று முதல் இன்றுவரை... தமிழ் திரையுலகில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தவர்.
அரசியலிலும் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு, தோற்றார்.
டி.வி. நிகழ்ச்சிகள், சினிமா, அரசியல் என படுபிசியாக இருந்தாலும் குஷ்பு பொறுப்பான குடும்பத் தலைவியாக தனது கடமைகளை தவறியதே கிடையாது.
அதிலும் சமீப காலமாக ஃபிட்னஸில் அதிக ஆர்வம் காட்டிவரும் குஷ்பு படு ஸ்லிம்மாக மாறி, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது யங் ஹீரோயின் லூக்கிற்கு மாறியுள்ளார். ஏற்கனவே நடிகை ஹன்சிகாவை குட்டி குஷ்பு என ரசிகர்கள் விமர்சித்த நிலையில், தற்போது குஷ்பு நயன்தாரா - தீபிகா படுகோன் போன்ற நாயகிகளுக்கு செம்ம டஃப் கொடுக்கும் அளவிற்கு மாறியுள்ளார்.
மேலும் பலர் தற்போது கூட நீங்கள் ஹீரோயினாக நடிக்கலாம் என, குஷ்புவை புகழ்ந்து வருகிறார்கள். இவரது தற்போதைய புகைப்படத்தை பார்த்தல் இவர் இரண்டு குழந்தைக்கு அம்மா என யாரும் சொல்ல மாற்றங்கள்.
அதிலும் தற்போது மஞ்சள் நிற சேலையில்... மஞ்ச காட்டு மைனாவாக மாறி வேற லெவல் அழகில் ஜொலிக்கிறார். குஷ்புவின் அழகி ஏறி கொண்டே போனாலும், வயசு குறைந்து கொண்டே வருகிறது.
சற்று முன் இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்த்துள்ள இந்த மஞ்சள் நிற சேலைக்கு ஏற்ற போல் கழுத்தில் கிராண்டான சோக்கர் ஒன்றையும் அணிந்துள்ளார்.
நெற்றி வகுட்டில் நீளவாக்கில் குங்குமம், முகம் நிறைய புன்னகை... தலை நிறைய பூ என பாலிவுட் ஹீரோயின் போல் ஜொலிக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.