Keerthy Suresh: இதுவரை காட்டாத தூக்கலான கிளாமர்! நைட் ட்ரெஸ்ஸோடு கண்ணடித்து கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), நைட் ட்ரெஸ்ஸில் கிளப் ஒன்றில் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் தற்போது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை காட்டாத அளவுக்கு கிளாமரையும் கீர்த்தி இந்த புகைப்படங்களில் காட்டியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மொழிகளில் படு பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஷூட்டிங் செல்லும் போதெல்லாம், அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும், வீடியோக்களையம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் கீர்த்தி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்களை செம்ம ஷாக் ஆகியுள்ளது.
இதுவரை திரையில் கூட காட்டாத தூக்கலான கிளாமர் நைட் டிரஸ் ஒன்றில், கிளப் செட்டப்பில் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் அந்த வழவழப்பான உடையுடன், தலையில் கேப் அணிந்து... கண் அடித்து கிக் ஏற்றியுள்ள புகைப்படமும் வேற லெவலுக்கு ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கீர்த்தி சுரேஷ் சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக், மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்ட சுரு’, மோகன் லாலுடன் மரைக்காயர் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதை தவிர தன்னுடைய சொந்த தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘வாஷி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டோவினோ தாமஸ் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.