MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பப்ளி பேபியாக இருந்த ஹன்சிகா... ஆபரேஷன் செய்து தான் சட்டென உடல் எடையை குறைத்தாரா? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்

பப்ளி பேபியாக இருந்த ஹன்சிகா... ஆபரேஷன் செய்து தான் சட்டென உடல் எடையை குறைத்தாரா? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்

நடிகை ஹன்சிகா ஆபரேஷன் செய்து தான் உடல் எடையை குறைத்துக் கொண்டதாக நெட்டிசன் ஒருவர் கூறிய நிலையில், அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jun 23 2023, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
hansika

hansika

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இவர் சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். அவர் ஹன்சிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

24
hansika

hansika

நடிகை ஹன்சிகா திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமான புதிதில் கொழுகொழுவென இருந்த ஹன்சிகா, அதன்பின் திடீரென உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறினார். ஒல்லியான பின்னர் பிகினி உடையில் போட்டோஷூட் எல்லாம் நடத்தி அதகளப்படுத்தி இருந்தார் ஹன்சிகா. இருப்பினும் தான் எப்படி உடல் எடையை குறைத்தேன் என்கிற சீக்ரெட்டை வெளியிடாமல் இருந்தார் ஹன்சிகா.

இதையும் படியுங்கள்... வயசுக்கு மரியாதை வேண்டாமா? பரியேறும் பெருமாள் படத்தில்.. வசனம் மறந்ததால் நெல்லை தங்கராஜை அறைந்த மாரி செல்வராஜ்

34
hansika

hansika

இந்த நிலையில், சர்வதேச யோகா தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. அப்போது யோகா செய்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த ஹன்சிகா, தான் உடல் எடையை குறைத்ததற்கு யோகாவும் உதவியதாக கூறி இருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்துவிட்டு யோகா மூலம் இப்படி ஆனதாக கூறுகிறீர்களே என கமெண்ட் செய்திருந்தார்.

44
hansika

hansika

அந்த நெட்டிசனின் கமெண்ட் பார்த்து கடுப்பான நடிகை ஹன்சிகா, அதற்கு ரிப்ளை செய்துள்ளார். அதில், நான் இப்போது இருக்கும் தோற்றத்திற்கு வர நிறைய கடின உழைப்பு தேவைப்பட்டது. நிறைய யோகா பயிற்சி செய்ததும் ஒரு காரணம் தான். இதில் காமெடி என்னவென்றால் யோகா பாசிடிவிட்டியை பரப்புவதோடு வெறுப்பை குறைக்கும் என பதிவிட்டு அந்த நெட்டிசனுக்கு தரமான பதிலடி கொடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்... நடிகை பூஜா ஹெக்டே உடன் புட்ட பொம்மா டான்ஸ் ஆடிய தளபதி விஜய்.... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹன்சிகா மோத்வானி
ஹன்சிகா மோத்வானி

Latest Videos
Recommended Stories
Recommended image1
1000 கோடி வசூல் அள்ளிய முதல் தமிழ் இயக்குநர்.... விஜய்க்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவர் - யார் இந்த பிரபலம்?
Recommended image2
அஞ்சலியின் ஆட்டம் ஆரம்பம்... மீண்டும் காதல் வலையில் சிக்கினாரா சரவணன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image3
ஜனனி மேல் கைவைத்த தேவசகாயத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி - அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved