Athulya Ravi : ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... சேலையில் சைடு போஸ் கொடுத்த அதுல்யா! கிக் ஏற்றும் ஹாட் போட்டோஸ்
இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் அதுல்யா, ரசிகர்களை கவரும் விதமாக அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
‘காதல் கண்கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா (athulya). முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது.
இதையடுத்து ‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து வந்த அதுல்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி, சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களில் கிளாமரான வேடங்களில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கைவசம் எண்ணித்துணிக, வட்டம் ஆகிய படங்கள் உள்ளன.
இதுதவிர ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதுல்யா. இப்படத்தை அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்குகிறார்.
இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் அதுல்யா, ரசிகர்களை கவரும் விதமாக சேலையில் லேசாக கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள போட்டோஸ் இணையத்தை கலக்கி வருகின்றன.