Actress Asin : வாவ்... என்ன அழகு!! நச்சுனு போட்டோ போட்டு... இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுத்த அசின்
இளம் நடிகை போலி ஸ்லிம் லுக்கில் கியூட்டாக இருக்கும் அசினின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவரை மீண்டும் சினிமாவில் நடிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்தவர் அசின். தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
தமிழில் சூப்பர் ஹிட்டான கஜினி பட இந்தி ரீமேக்கில் அமீர்கானுக்கு ஜோடியாக நடிக்க இந்தி திரையுலகிற்கு சென்ற அசின், அங்கு அமீர்கானைத் தொடர்ந்து சல்மான் கான், அக்ஷய்குமார், அஜய் தேவ்கன் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
அக்ஷய் குமாருடன் நடிக்கும் போது அவர் மூலமாக அவருடைய நண்பரான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவின் அறிமுகம் கிடைத்தது.
முதலில் நட்பாக பழகி வந்த இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் 2016ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அசின் - ராகுல் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. தனது செல்லமகள் அரினுக்காக அசின் சினிமாவை விட்டு விலகிவிட்டார். மகளை கவனித்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமை மட்டும் பயன்படுத்தி வந்த அசின் தற்போது டுவிட்டரிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது இளம் நடிகை போலி ஸ்லிம் லுக்கில் கியூட்டாக இருக்கும் அசினின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவரை மீண்டும் சினிமாவில் நடிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.