அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்..! நடிகர் விவேக்கிற்கு இதயபூர்வமாக அஞ்சலி செலுத்திய ஆத்மிகா..!
நடிகை ஆத்மிகா, மறைந்த நடிகர் விவேக்கிற்கு காமெடி செலுத்தும் விதமாக, தனது வீட்டு தோட்டத்தில் சில மரங்களை நட்டு, இதயபூர்வமான அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசுரன்" படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இளைஞர்களின் பார்வை மட்டுமல்ல, தயாரிப்பாளர்களின் பார்வையும் பட்டுள்ளது.
தற்போது ஆத்மிகாவின் கைவசம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கண்ணை நம்பாதே படத்திலும், விஜய் ஆண்டனியுடன் மற்றொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
தற்போது இவர், மறந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டு தன்னுடைய இதய பூர்வமான அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்... என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார்.
அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளார்