ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர் - என்ட்ரி கொடுக்கும் ஸ்டைலிஷ் வில்லன்!
Varisu Serial: ஜீ தமிழ் சீரியலில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் 'வாரிசு' தொடரில் இருந்து முக்கிய பிரபலம் வெளியேற சன் டிவி பிரபலம் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

வாரிசு சீரியல்:
சமீப காலமாக, சூப்பர் ஹிட் திரைப்படங்களின் பெயர்களில் சீரியல்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்... இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' பட தலைப்பில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக துவங்கியது தான் 'வாரிசு' தொடர். இந்த சீரியலில், சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி மற்றும் மீனா சீரியலில் நடித்த ஜெய் ஸ்ரீனிவாஸ் ஹீரோவாக நடிக்க, ஸ்வேதா டோரதி ஹீரோயினாக நடித்து வருகிறார்.
விவாகரத்துக்கு பின் காதல் வலையில் சிக்கிய ஹர்திக் பாண்டியா... அடடே ‘இந்த’ நடிகையை தான் லவ் பண்றாரா?
உணர்வு பூர்வமான கதைக்களம்:
குடும்ப மரபு, உறவுகள் மற்றும் உணர்ச்சி மாதங்கள் அடங்கிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களையே ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் மற்ற தொடர்களுக்கு TRP-யில் டஃப் கொடுத்து வருகிறது.
வெளியேறிய பிரபலம்:
பிரமாண்ட நட்சத்திர கூட்டத்துடன், பிக்பட்ஜெட்டில் பாலிவுட் சீரியல்களுக்கு நிகரான ஒரு தொடராக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இருந்து பிரபல நடிகர் யோகேஷ் வெளியேறியுள்ளார். இவர் பிரேம்குமார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். திரைப்பட வாய்ப்பு காரணமாகவே யோகேஷ் இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
என்ட்ரி கொடுக்கும் ஸ்டைலிஷ் வில்லன்:
இவர் வெளியேறிவிட்டதால், இவருக்கு பதிலாக... பல சீரியல்களில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து பிரபலமான திலக் கமிட் ஆகி உள்ளார். இவர் இதற்க்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தை போல, செவ்வந்தி போன்ற சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.