Vivek Birthday Special: நடிகர் விவேக் பற்றி பலரும் அறிந்திடாத 8 அரிய தகவல்கள் இதோ..!
மறைந்த நடிகர் விவேக்கை (Actor Vivek) அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. தன்னுடைய ஒவ்வொரு காமெடி மூலமும் ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டும் இன்றி சிந்திக்கவும் வைத்தவர். திடீர் மாரடைப்பு காரணமாக இவர், இந்த உலகை விட்டு மறைந்தாலும், ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் நிலைத்து நிற்கிறார். இன்று அவரது 60 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில்... விவேக் பற்றி பலரும் அறிந்திடாத சில அரிய தகவல்கள் இதோ...
நடிகர் விவேக்கை ஒரு காமெடியனாக நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இவர் ஒரு இயக்குனராகும் லட்சியத்தோடு தான் சினிமாவிற்கு வந்தார். அதே போல் இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான 'மனதில் உறுதி வேண்டும்' என்கிற படத்தில், எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
ஒரு மனிதன் பூமியில் உயிர் வாழ மூலாதாரமான உள்ளது அவன் சுவாசிக்கும் காற்று தான். மரம் நடவேண்டும் என்று அப்துல் கலாம் அவர்கள் வலியுறுத்தியதை தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக எடுத்து கொண்டு செயல்பட்டவர் நடிகர் விவேக். இதுவரை சுமார் 30 லட்சம் மரங்களை நட்டுள்ளார்.
நடிகர் விவேக் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு டப்பிங் மொழி படங்களிலும் நடித்துள்ளார். 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இவர் நடித்தார்.
நடிப்பைத் தாண்டி மிகவும் பிரபலமான குளிர்பானமாக இருந்த மிராண்டா மற்றும் பிரபல நகை நிறுவனம் ஒன்றிலும் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் விவேக் இருந்துள்ளார்.
அதே போல் தமிழகத்தில் பிளாஸ்டிக் உபயோகம் அதிகமாக இருந்ததால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல விதத்தில் முயற்சி செய்து வந்த நிலையில், அதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கினர். Plastic pollution free tamilnadu என்கிற இந்த கமிட்டிகள் அம்பாசிடராக நடிகை ஜோதிகாவும் விவேக்கும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடிகர் விவேக், தமிழில் வெளியான ரன், சாமி, மற்றும் பேரழகன் ஆகிய 3 படங்களுக்காக சிறந்த காமெடி நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார். அதே போல் விவேக்கின் நடிப்பில் வெளிவந்த 'உன்னருகே நானிருந்தால்', 'ரன்', 'பார்த்திபன் கனவு', 'அந்நியன்', 'சிவாஜி', ஆகிய ஐந்து படங்களுக்காக சிறந்த காமெடியனுக்கான தமிழ்நாடு ஸ்டேட் அவார்டு இவருக்குப் கிடைத்தது.
விவேக் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடைய 100வது திரைப்படம் என்றால் நடிகர் பிரபு, ரோஜா நடிப்பில் வெளியான 'சூப்பர் குடும்பம் திரைப்படம்' தான். அதே போல் இவரது 200வது திரைப்படம் என்றால் அது நடிகர் சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்திருந்த 'சிங்கம் 2' திரைப்படம்.
நடிகர் விவேக் 'சொல்லி அடிப்பேன்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார் ஆனால் இந்த திரைப்படம் வெளி வராமலேயே போனது. பின்னர் பாலா என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்தாத்தால் ஹீரோவாக நடிப்பதை நிறுத்தி விட்டு மீண்டும் காமெடியில் கலக்க துவங்கி விட்டார்.