Vishal : முன்னாள் முதல்வரை எதிர்த்து போட்டி... அரசியலில் குதிக்கிறாரா நடிகர் விஷால்?... அவரே சொன்ன நச் பதில்
Vishal : நடிகர் விஷால், வருகிற 2024-ம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வந்தது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... 3டி தொழில்நுட்பத்தில் சியான் படம் ! ரஞ்சித் - விக்ரம் கூட்டணியின் சூப்பர் அப்டேட் இதோ!
இந்நிலையில், நடிகர் விஷால், வருகிற 2024-ம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அவர் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதையை எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி சார்பில் குப்பம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதையும் படியுங்கள்... லிகர் படத்துக்காக நிர்வாணமாக நடித்த விஜய் தேவரகொண்டா.. ஆடையின்றி இருக்கும் போஸ்டர் பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்
இதுகுறித்து நடிகர் விஷாலே விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “ஆந்திர அரசியலில் நான் களமிறங்க உள்ளதாகவும், குப்பம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். இதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. யாரும் இது தொடர்பாக என்னை அணுகவில்லை.
இதையும் படியுங்கள்... பிரபல சீரியல் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சமையல்காரர் - சின்னத்திரையை உலுக்கிய பகீர் சம்பவம்
இந்த செய்தி எங்கிருந்து பரவியது என்பது தெரியவில்லை. ஆந்திர அரசியலில் நுழையும் எண்ணமோ சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிடும் எண்ணமோ எனக்கு துளியும் இல்லை. படங்களில் தான் முழுக்க முழுக்க கவனம் செலுத்த உள்ளேன்” என்று கூறி அரசியல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஷால்.