20 வருஷ பகையை மறந்து... பிரபலத்தின் சிகிச்சைக்கு உதவிய விக்ரம்! குவியும் பாராட்டு..!
பிரபல தயாரிப்பாளர் துரை, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வரும் நிலையில், நடிகர் விக்ரம் 20 ஆண்டுகால பகையை மறந்து அவருக்கு உதவி உள்ளார்.
தமிழ் சினிமாவில் பல பிரமாண்ட படங்களை தயாரித்து பிரபலமானவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. சத்யராஜ் நடித்த 'என்னம்மா கண்ணு' என்கிற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமான இவர், பின்னர் தேசிய விருது பெற்ற பிதாமகன், சேது, விஜயகாந்த் நடித்த கஜேந்திரா, ரஜினிகாந்த் நடித்த பாபா, போன்ற பல படங்களை எடுத்தார்.
கடன் உடன் வாங்கி, விஜயகாந்தை வைத்து இயக்கிய கஜேந்திரா மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், மிகுந்த பண நெருக்கடிக்கு ஆளாகி வாங்கிய கடனுக்காக மொத்த சொத்துக்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இவரின் குடும்பத்தினரும் இவரை கை விட்ட நிலையில், தங்க இடம் கூட இன்றி, ஆதரவற்ற நிலையில் இருந்த இவருக்கு, இவரின் நண்பர்கள் தான் தொடர்ந்து உதவி செய்து வந்தனர்.
காசுக்காக இயக்குனர் பாலா மனைவியின் அபாஷன் நாடகம்! MP-யுடன் கள்ள உறவு.. புட்டு புட்ட வைத்த காயத்திரி தேவி!
அப்போது அவரின் நண்பர் ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு துரையின் நிலைகுறித்து தெரியப்படுத்தும் விதமாக வெளியிட்ட வீடியோ வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் இவருக்கு உதவ முன்வந்தனர். ரஜினி, சூர்யா, போன்ற பிரபலங்கள் உதவிய நிலையில்... தற்போது துரையுடன் ஏற்பட்ட 20 வருட பகையை மறந்து, அவருக்கு உதவி செய்துள்ளார் நடிகர் விக்ரம்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட துரை, தற்போது பல பிரபங்கள் உதவியால் உடல்நலம் தேறி இருந்தாலும்... இவரின் காலில் ஏற்பட்ட புண் தீவிரமாக இருப்பதால், ஒரு காலை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். செயற்கை கால் பொறுத்த பணம் இல்லாமல் தவித்து வந்த, இவருக்கு பிதாமகன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சண்டையை மறந்து நடிகர் விக்ரம் உதவியுள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் விக்ரமின் இந்த செயலை மனதார பாராட்டி வருகிறார்கள்.
திருமணமான ஒரே வருடத்தில்... பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் கணவர் அதிர்ச்சி மரணம்!