விஜய் அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா? - தாய் ஷோபா கொடுத்த சிம்பிள் விளக்கம்
நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், இன்று காலை பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தியது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் என்பது அனைவரும் அறிந்ததே. தந்தையின் உதவியுடன் சினிமாவில் எண்ட்ரி ஆனாலும், பின்னர் தனது கடின உழைப்பால் முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும், சினிமாவில் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி உள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் விஜய் உடன் சேர்ந்து விளம்பரத்தில் கூட நடித்திருக்கிறார் ஷோபா. இந்நிலையில், இன்று காலை பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் ஷோபா.
இதையும் படியுங்கள்... அட்ராசக்க... டல் அடிக்கும் டி.ஆர்.பி-யை எகிற வைக்க பிக்பாஸ் அறிவித்த பலே டாஸ்க் - வைரலாகும் புரோமோ இதோ
உலக மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், தனது மகன் நடித்துள்ள வாரிசு படம் வெற்றியடைவும் வேண்டி பிரார்த்தனை செய்த அவருக்கு சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஷோபா சந்திரசேகர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக விஜய் அரசியலுக்கு வாருவாரா என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஷோபா சந்திரசேகர், தனக்கு அதைப்பற்றி ஒன்னுமே தெரியாது என்றும் விஜய் என்ன முடிவு பண்றாரோ அதுதான். அதேபோல் வாரிசு படத்தின் கதை என்ன என்பது எனக்கு தெரியாது. இது குடும்ப படம் என்று கேள்விப்பட்டேன். அதைத்தவிர எதுவும் தனக்கு தெரியாது என கூறினார்.
இதையும் படியுங்கள்... முரட்டு சிங்கிளாக 57-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான் - களைகட்டிய பர்த்டே பார்ட்டி போட்டோஸ் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.