மனோஜ் பாரதிராஜா இறப்புக்கு மாரடைப்பு காரணமல்ல! இது தான்! தம்பி ராமையா பேச்சு!
மனோஜ் பாரதிராஜாவின் இறப்புக்கு மாரடைப்பு மட்டும் காரணம் அல்ல என்று நடிகரும், இயக்குனருமான தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.

Thambi Ramaiah commented on Manoj Bharathiraja death: நடிகரும், இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா 48 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு ஒட்டுமொத்த திரையுலமும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளது.
Manoj Bharathiraja
மனோஜின் உடலுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் சார்பில் தலைவர்கள், நடிகரும், தவெக தலைவருமான விஜய், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இவர்கள் தவிர மணிரத்னம், வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குநர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், நடிகைகள் என திரையுலகை சேர்ந்த அனைவரும் மனோஜ் பாரதிராஜாவிவின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர். பின்பு மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
Manoj Bharathiraja Death
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் என்றாலும் தந்தையின் உதவியின்றி சொந்த காலில் நிற்க தொடர்ந்து முயன்று வந்தார் மனோஜ் பாரதிராஜா என்று பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். மனோஜின் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. ஆனாலும் சினிமாவில் சாதித்து விட வேண்டும் என்ற வேட்கையை மனோஜ் விடவில்லை. தனது தந்தை பாரதிராஜாவிடம் மட்டுமின்றி முன்னணி இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தார் மனோஜ்.
தீராத துயரம்; கண்ணீரோடு விடைகொடுத்த குடும்பத்தினர் - தகனம் செய்யப்பட்டது மனோஜ் உடல்!
Manoj Bharathiraja , Cinema
இந்நிலையில், மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு மாரடைப்பு மட்டும் காரணம் இல்லை மன அழுத்தமும் முக்கிய காரணம் என்று நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''மனோஜ் தம்பி உயிரிழப்புக்கு மாரடைப்பு மட்டும் காரணமில்லை. மன அழுத்தமும் அவருடைய இறப்புக்கு பெரும் காரணமாகும். பெரும் வெற்றி பெற்ற ஒரு இயக்குனரின் மகன் என்ற மிகப்பெரிய சுமை எப்போதும் அவர் மீது இந்த சமுகம் வைத்து இருந்தது.
மனோஜ் அடுத்து என்ன படம் இயக்குகிறார்? இந்த படமாவது சரியாக போகுமா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை இந்த சமூகம் மனோஜிடம் கேட்டுக் கொண்டே இருந்தது. இதனால் மனோஜ் பெரும் மன அழுத்தத்தில் இருந்தார். இப்போது அது உயிரையே பறித்து விட்டது. அப்பா சாதித்து விட்டார்; நீ எப்போது சாதிக்க போகிறாய் என்ற சுமையை பிள்ளைகள் மீது ஒருபோதும் வைக்காதீர்கள்'' என்று தம்பி ராமையா உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.
Manoj Bharathiraja
தம்பி ராமையா கூறியதுபோல் மனோஜின் மறைவுக்கு மன அழுத்தமும் முக்கிய பங்காற்றியுள்ளது. தந்தை ஏதாவது துறையில் சாதித்து விட்டால் அவருடைய பிள்ளையும் சாதிக்க வேண்டும் என்று இந்த சமூகம் எதிர்பார்க்கிறது. தந்தை ஒரு துறையில் சாதித்து விட்டால் மகனும் அந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு இயற்கையான திறமை உண்டு. உரிய நேரத்தில் அதுவே வெளிவரும். ஆகவே அப்பாவை போல், நண்பனை போல் நீ கண்டிப்பாக ஜெயித்தே ஆக வேண்டும் என்ற சுமையை பிள்ளைகள் மீது குறிப்பாக இளம் பருவ வயதினரிடம் ஒருபோதும் இறக்கி வைக்காதீர்கள்.
பார்த்த நொடியே நந்தனா மீது காதலில் விழுந்த மனோஜ்; நெஞ்சை தொடும் லவ் ஸ்டோரி!