- Home
- Cinema
- Thalapathy 66 : அட்ராசக்க... முதன்முறையாக விஜய்யுடன் கூட்டணி! ‘தளபதி 66’ல் சரத்குமாருக்கு இப்படி ஒரு வேடமா?
Thalapathy 66 : அட்ராசக்க... முதன்முறையாக விஜய்யுடன் கூட்டணி! ‘தளபதி 66’ல் சரத்குமாருக்கு இப்படி ஒரு வேடமா?
Thalapathy 66 : தளபதி 66 படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இன்று நடைபெற்ற பூஜையில் சரத்குமார் கலந்துகொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ராதிகா இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய், அடுத்ததாக தளபதி 66 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இதன்மூலம் நடிகர் விஜய் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். இதன்மூலம் நடிகர் விஜய்யும், தமனும் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படடத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தளபதி 66 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அதில் நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகை ராஷ்மிகா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அடுத்தவாரம் முதல் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், தளபதி 66 படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இன்று நடைபெற்ற பூஜையில் சரத்குமார் கலந்துகொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ராதிகா இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இப்படத்தின் கதைப்படி நடிகர் சரத்குமார் வனத்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் நடிகர் விஜய்யும் சரத்குமாரும் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Rashmika Mandanna : தளபதி 66 பட பூஜையில் நடிகர் விஜய்யை வெட்கப்பட வைத்த ராஷ்மிகா... வைரலாகும் கியூட் கிளிக்ஸ்