பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த் மகளுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்..! மழையாய் பொழிந்த வாழ்த்து..!
பிரபல இயக்குனரும், நடிகருமான ரமேஷ் அரவிந்தின் மகளுக்கு திருமணம் நடந்த விஷயத்தை அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர் ரமேஷ் அரவிந்த்.
கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான இவர், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமானவர்.
குறிப்பாக தமிழில், மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, பஞ்ச தந்திரம், டூயட், சதிலீலாவதி, ஜோடி, உத்தமவில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது மகள் நிகரிக்காவிற்கு டிசம்பர் 28 , அதாவது நேற்று மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது.
இதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரமேஷ் அரவிந்த். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்தை மழை போல் பொழிந்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு தயாராகும் தருணம்
கணவரோடு நிஹாரிக்கா
அன்பு மகளின் திருமணத்தில் ரமேஷ் அரவிந்த்
வரவேற்பு புகைப்படங்கள்
மகளுடன் சேர்ந்து அப்பாவும் கியூட் டான்ஸ்
களைகட்டிய கொண்டாட்டம்