- Home
- Cinema
- கொரோனாவால் பிரபல நடிகர் திருமணத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்பு... சொந்த பந்தங்கள் சூழ காதலியை கரம் பிடித்தார்!
கொரோனாவால் பிரபல நடிகர் திருமணத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்பு... சொந்த பந்தங்கள் சூழ காதலியை கரம் பிடித்தார்!
கோலிவுட்டில் உள்ளம் கொள்ளை போகுதே, அன்பே சிவம், புதுப்பேட்டை உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சுவாமிநாதன். இவருடைய மகனான அஸ்வின் ராஜா, தற்போது திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். கும்கி படத்தில் உண்டியலாக வந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த அஸ்வின் 4 வருடங்களாக காதலித்து வந்த பெண்ணை இன்று கரம் பிடித்துள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மொட்டை ராஜேந்திரனின் மக்கு பிள்ளையாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார் அஸ்வின்.

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படம் அஸ்வினுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. அந்த படத்தில் தம்பி ராமையாவுடன் சேர்ந்து உண்டியல் செய்யும் காமெடி பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டானது.

தற்போது தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்ட அஸ்வின், தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

சென்னை கே.கே.நகரில் வசித்து வரும் ராஜசேகர் என்பவரது மகள் வித்யா ஸ்ரீயை அஸ்வின் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

அமெரிக்காவில் எம்.எஸ். பட்டப்படிப்பை முடித்துள்ள வித்யா ஸ்ரீக்கும், அஸ்வினுக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் சம்மதித்தனர்.

பிரபல தயாரிப்பாளர் மகனின் திருமணமாக இருந்தாலும் கொரோனா லாக்டவுன் காரணமாக அஸ்வினின் திருமணத்தில் நெருங்கிய சொந்தங்களான 20 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

வீட்டில் மிகவும் எளிமையாக நடைபெற்ற திருமணத்தில் சொந்த பந்தங்கள் மத்தியில் தாலி கட்டி நீண்ட நாள் காதலியை மனைவியாக்கி கொண்டார் அஸ்வின். இந்த புதுமண தம்பதியின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.