ஜி.வி.பிரகாஷ் தங்கச்சியா இது?... கடற்கரையை கொந்தளிக்க வைத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!
பிரபல நடிகர், இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷின் தங்கை ஜி.வி.பவானி ஸ்ரீ கடற்கரையில் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், பிரபல இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷுக்கு பவானி ஸ்ரீ என்ற தங்கை உள்ளார். இவரும் விரைவில் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.
விஜய்சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் க/பெ ரணசிங்கம். இதில் பவானி ஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதே சமயம் நடிகை அமலா அக்கினி நடித்துவரும் ஒருவர் வெப் சீரிஸ்லும் இவர் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்த ஆனந்த் இயக்குனராக அறிமுகமாக உள்ள "நண்பன் ஒருவன் வந்த பிறகு" என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
பவானி ஸ்ரீ நடிப்பில் இன்னும் ஒரு படம் கூட வெளிவராத நிலையில், கலர் கலரான போட்டோ ஷூட்களில் முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுத்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் கடற்கரையில் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ள பவானி ஸ்ரீ அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கிளுகிளுப்பு கூட்டியுள்ளார்.
ஆளே இல்லாத கடற்கரையில் நாற்காலியில் அமர்ந்த படி தனது வாழைத்தண்டு காலைக்காட்டி பவானிஸ்ரீ கொடுத்துள்ள போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
கண்களுக்கு குளிர்ச்சியாக கடற்கரையில் பவானி ஸ்ரீ நடத்தியுள்ள போட்டோ ஷூட் ஏகபோகமாக வைரலாகி வருகிறது.
பவானி ஸ்ரீயின் போட்டோக்களை பார்க்கும் சிலரோ முதல் படம் வெளியாவதற்குள்ளேயே இப்படியா? என வாய்பிளக்கின்றனர்.