- Home
- Cinema
- குக்கிங் முதல் கிளீனிங் வரை... தூள் கிளப்பும் நடிகை அசின் மகள் அரின்... வைரலாகும் புகைப்படங்கள்!
குக்கிங் முதல் கிளீனிங் வரை... தூள் கிளப்பும் நடிகை அசின் மகள் அரின்... வைரலாகும் புகைப்படங்கள்!
பிரபல நடிகை அசின் மகள் அரின், குக்கிங் மற்றும் கிளீனிங் செய்யும் அழகு புகைப்படங்களை அசின் முதல் முறையாக சமூக வலைத்தளத்தில் பகிர அது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மாடலாக இருந்து பின் நடிகையாக மாறியவர் கேரளத்து பைங்கிளி அசின். மலையாளத்தில் கடந்த 2001 ஆண்டு அறிமுகமான இவர், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகிற்கு தாவினார். பின்னர் தமிழில் இவர் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி' திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

இவர் நடித்த படங்கள் வெற்றி பெறவே தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் குவிந்தது. சூர்யாவுக்கு ஜோடியாக கஜினி, விக்ரமுக்கு ஜோடியாக மஜா, விஜய்க்கு ஜோடியாக சிவகாசி, அஜித்துடன் ஆழ்வார், என தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடிபோட்டு நடித்தார்.

தமிழை தொடர்ந்து பாலிவுட் திரையுலகிலும் கவனம் செலுத்த துவங்கினார் அசின். அப்போது எதேர்ச்சியாக பிரபல நடிகர் சல்மான்கானின் நண்பரும், மைக்கிரோமேக்ஸ் உரிமையாளர்களில் ஒருவராக ராகுல் ஷர்மாவின் நட்பு கிடைத்து அது காதலாகவும் மாறியது.

இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டை சேர்ந்தவர்களும் சம்மதம் தெரிவிக்கவே, இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

தற்போது இவர்களுக்கு 2 வயதில் அரின் என்கிற அழகிய மகள் ஒருவரும் உள்ளார். அவ்வப்போது அசின் தன்னுடைய மகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய செல்ல மகள், சமையல் செய்யும் கியூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அரினுக்காகவே பிரத்தியேகமாக இந்த கிட்சன் செட் செய்யப்பட்டுள்ளது. இதில், கத்தரிக்காய், கேரட் போன்றவற்றை வைத்து ஏதோ சமையல் செய்கிறார்.

குக்கிங்கில் மட்டும் அல்ல, கிளீனிங் வேலையிலும் தூள் கிளப்பியுள்ளார் அரின்.

2 வயதே ஆகும் இவர் செய்யும் இந்த செல்ல சேட்டைகள் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக கை உரை அணிந்து வேலை செய்யும் அழகை பாருங்கள்.

வேலையெல்லாம் செய்து முடிச்சாச்சு... அதான் சாவகாசமாய் புக் படிக்குது குட்டி பாப்பா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.