MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காதலுக்காக சினிமாவை உதறிவிட்டு... 16 வயது மூத்த பிளே பாய் நடிகரை திருமணம் செய்த இந்த குழந்தை யார் தெரியுமா?

காதலுக்காக சினிமாவை உதறிவிட்டு... 16 வயது மூத்த பிளே பாய் நடிகரை திருமணம் செய்த இந்த குழந்தை யார் தெரியுமா?

மிகப்பெரிய கோடீஸ்வரியாக  இருந்தும், சினிமா மற்றும் டான்ஸ் மீதான ஆர்வத்தால் திரையுலகில் அறிமுகமாகி, டாப் ஹீரோயினாக இருக்கும் போதே தன்னைவிட 16 வயது மூத்த நடிகரை, திருமணம் செய்து கொண்டு செட்டிலான இந்த க்யூட் குழந்தை யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 08 2024, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sayyeshaa Child artist in Gajini

Sayyeshaa Child artist in Gajini

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவும், அனைத்து நடிகைகளுக்குமே முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் மற்றும் ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பு அமைவதில்லை. ஆனால் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே அப்படிப்பட்ட வாய்ப்பை கைப்பற்றியவர் தான் பிரபல நடிகை சாயிஷா சைகல். இவரின் குழந்தை பருவ புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Sayyeshaa Family Background

Sayyeshaa Family Background

மும்பையில் பிறந்து வளர்ந்த, சாயிஷா பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சுமித் சைகலின் மகள் ஆவார். மேலும் இவருடைய பாட்டி நசீர் பானு, ஹிந்தி திரை உலகத்தில் 1930 மற்றும் 1950க்கு இடைப்பட்ட காலங்களில், முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட் திரையுலகை ஆட்டி படைத்தவர்.

அதேபோல் பாலிவுட் நடிகர் திலீப் குமார், நடிகை சைரா பானு, நடிகை ஃபரா ஆகியோர்...  இவரின் நெருங்கிய உறவினர்கள் ஆவர். மிகப்பெரிய சினிமா பின்னணி இருந்தும், பாலிவுட் திரையுலகில் நெபாடிஸம் என்பது சகஜமானதாக இருந்தாலும், தன்னுடைய திறமையால்... தென்னிந்திய திரையுலகில் வாய்ப்பு தேடி நடித்தவர் சாயிஷா.

சன் டிவி வாய்ப்புக்காக... விஜய் டிவியில் சீரியலை உதறி தள்ளிய நடிகை!

36
Sayyeshaa and Arya Wedding

Sayyeshaa and Arya Wedding

இவர் தமிழில், 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'கஜினி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சிறு கதாபாத்தியதில் நடித்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். தமிழில் தான் தொடர்ந்து 6 படங்கள் நடித்தார்.

சாயிஷாவின் நடன திறமையை பார்த்து வியர்ந்து, இவரை தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தான், தான் இயக்கிய 'வனமகன்' திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த நிலையில்,  இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜூங்கா போன்ற படங்களில் நடித்தார்.

46
Sayyeshaa love Arya

Sayyeshaa love Arya

நடிகர் ஆர்யாவுடன் 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து ஆர்யாவுடன் காப்பான், டெடி போன்ற படங்களில் நடித்தார். பின்னர் பெற்றோர் அனுமதியுடன் ஆர்யா - சாயிஷா இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

நெப்போலியன் மகன் திருமணத்தில் பரிமாறப்பட்ட 70 வகையான இந்திய உணவுகள்! 4 மாதமாக நடந்த ஏற்பாடு!

56
Sayyeshaa Cinema carrier

Sayyeshaa Cinema carrier

இவர்களின் திருமணம், ஹைதராபாத்தில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு முன்பு ஒப்புக்கொண்ட சில படங்களை மட்டுமே நடித்து முடித்த சாயிஷா,  திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகினார்.

ஆனால் கடந்த ஆண்டு சிம்பு - கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான, 'பத்து தல' படத்தில் ராவடி என்கிற ஐட்டம் பாடலுக்கு, குத்தாட்டம் போட்டு கிறங்க வைத்தார்.
 

66
Sayyeshaa Family Photo

Sayyeshaa Family Photo

ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு, தற்போது அழகிய மகள் ஒருவரும் உள்ளார். ஆர்யா சாயிஷாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பில் இருந்தே ஒரு சர்ச்சை பிரபலமாகவே அறியப்பட்டவர். சில ஹீரோயின்களுடன் டேட்டிங் செய்ததாகவும் கூறப்பட்டது. அதே போல் எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி மூலம் இவரை திருமணம் செய்து கொள்ள பல பெண்கள் போட்டி போட்டனர். ஆனால் இறுதியாக தன்னை விட 16 வயது இளையவரான சாயிஷாவை திருமணம் செய்து கொண்டு... சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

70 வயதில் ராஜ வாழ்க்கை வாழும் உலக நாயகன் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஆர்யா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved