1100 திரையங்குகளில் யானை வெளியீடு...எனக்காக தான் எல்லாம்.? இயக்குனர் ஹரி குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி...
Arun vijay yaanai: ஹரி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள யானை திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் இயக்குனர் ஹரி தனக்காக கூடுதல் கவனத்தை செலுத்தியதாக நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Arun Vijay
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ' யானை ' படம் விக்ரம் படத்தால் தள்ளிப்போயிருந்த நிலையில், தற்போது போதுமான திரையரங்குகள் கிடைத்துள்ளது. உலகம் முழுவதிலும் 1100 திரையங்குகளில் யானை திரைப்படம் நாளை ஜூலை 1ம் தேதி வெளியிடப்படுகிறது.
Arun vijay
இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று ஹரியும், அருண் விஜய்யும் புரொமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினர். சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக அருண் விஜய் இதற்காக மலேசியாவுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.அருண் விஜய் படத்திற்கு முதல் நாள் வசூல் இதுவரை பெரிதாக இருந்ததில்லை. இதனை மாற்றவே யானை படத்தின் மூலம் அடித்தளம் போட்டுள்ளதாக தெரிகிறது.
Arun vijay
அதிரடி ஆக்சன், ஃபேமிலி பொழுதுபோக்காக உருவாகியுள்ள இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில், பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Arun vijay
இந்த படத்தில் இயக்குனர் ஹரி தனக்காக கூடுதல் கவனத்தை செலுத்தியதாக நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் கதை பிடித்திருந்தால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருப்பதாகவும் குறியுள்ளார்.