நடிகர் அருண் விஜய் குடும்பத்தில் நேர்ந்த சோகம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
தமிழ் சினிமாவில், தொடர்ந்து சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அருண் விஜய். இவரது குடும்பத்தில், தற்போது நேர்ந்துள்ள சோகத்திற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு, தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக 1995ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய்.
இதை தொடர்ந்து பல அடிகள் சினிமாவில் வங்கிய போதும், அருண் விஜய் தனது விடா முயற்சியை கைவிட்டதில்லை.
பிரியம், கங்கா கௌரி, இயற்க்கை, பாண்டவர் பூமி என்று பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியபோதும், அவரால் திரையுலகில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. ஆனாலும் தனது தொடர் முயற்சியால் இன்று அருண் விஜய் மிகப் பெரிய நடிகராக, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை தற்போது பெற்றுள்ளார்.
2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் திரையுலகில் அருண் விஜய்க்கு வேறு லெவல் ரீ-என்ட்ரி கிடைத்தது.
குற்றம் 23, தடம், செக்கச்சிவந்த வானம், சகோ என்று அதிரடியாய் தொடர் வெற்றிகள் குவிய தொடங்கியது. பெரிய இயக்குனர் படங்களையும், பெரிய பட்ஜெட் படங்களையும் தேர்வு செய்து நடிப்பதை விட, சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். தற்போது இவரது மகனும் ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் அருண் விஜய் குடும்பத்தில் நேர்ந்துள்ள மரண சம்பவம், அவருடைய குடும்பத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் அருண் விஜய்யின் மனைவி ஆர்த்தியின் தந்தையும், மாஞ்சாவேலு, மலை மலை, தடையரை தாக்கு, போன்ற படங்களின் தயாரிப்பாளருமான டாக்டர் என்.எஸ்.மோகன் சமீப காலமாக, உடல் நல பிரச்சனைகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
இவரது மறைவு, திரையுலகினர் மற்றும் நடிகர் விஜயகுமாரின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவரது மறைவிற்கு பலர், சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.