MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அப்பா ஸ்டாலினை விட 3 மடங்கு சொத்துக்கு அதிபதி! ராஜா வீட்டு கன்னுகுட்டி உதயநிதியின் சொத்து மதிப்பு!

அப்பா ஸ்டாலினை விட 3 மடங்கு சொத்துக்கு அதிபதி! ராஜா வீட்டு கன்னுகுட்டி உதயநிதியின் சொத்து மதிப்பு!

சினிமா பிரபலமாக இருந்து தற்போது அரசியல் பிரபலமாக மாறிய உதயநிதி இன்று தன்னுடைய 47-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.  

3 Min read
Author : manimegalai a
| Updated : Nov 27 2024, 12:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

இளம் வயதிலேயே துணை முதல்வர் என்கிற மிகப்பெரிய பொறுப்பை வகித்து வரும், உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Udhayanidhi

Udhayanidhi

இன்று தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திமுக கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் - துர்கா தம்பதிகளின் மகன் தான் உதயநிதி ஸ்டாலின். 1977 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து சினிமாவில், விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமான பின்னரே அரசியலில் இணைந்தார் உதயநிதி.

39
Vijay Kuruvi Movie

Vijay Kuruvi Movie

திரையுலகில் 2008 ஆம் ஆண்டு, தளபதி விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'குருவி'. இந்த படத்தை ரெட் ஜெயின் மூவிஸ் மூலம் தயாரித்தார் உதயநிதி. முதல் படமே 18 கோடியில் தயாரித்த உதயநிதிக்கு இந்த படத்திற்கு தோல்வியை கொடுத்த போதிலும், இதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து இயக்கிய, 'ஆதவன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
 

49
Actor Suriya Aathavan movie

Actor Suriya Aathavan movie

கே எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் வடிவேலு, ராகுல் தேவ், ஆனந்த் பாபு, சரோஜா தேவி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் உதயநிதிக்கு வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் உதயநிதி சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். எனவே இதுவே இவருக்கு ஒரு நடிகராக அறிமுக படமாக மாறியது.
 

59
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

தயாரிப்பாளராக மட்டுமின்றி விநியோகஸ்தராகவும் வலம் வந்த உதயநிதி, இதுவரை 8 படங்களை மட்டுமே தயாரித்திருந்தாலும்... பல சூப்பர் ஹிட் படங்களை விநியோகம் செய்துள்ளார். குறிப்பாக  விண்ணைத்தாண்டி வருவாயா, திரைப்படத்தில் துவங்கி...  மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா, பக்ரீத், அரண்மனை 3, ராதே ஷாம், விக்ரம், என பல பிக் பட்ஜெட் படங்களை விநியோகம் செய்துள்ளார். பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 என  இரண்டு பாகங்களையும் தமிழகத்தில் வினியோகித்த பெருமை இவரையே சேரும்.

69
Oru Kal Oru Kannadi

Oru Kal Oru Kannadi

தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், தன்னுடைய வெற்றி பயணத்தை உறுதி செய்த உதயநிதி, 2012ஆம் ஆண்டு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், காமெடி கலாட்டாவாக வெளியானது. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். மேலும் சந்தானத்தின் காமெடி மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

79
Maamannan Movie

Maamannan Movie

இதன் பின்னர் இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், நிமிர், என பல படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்த போதிலும்... சைக்கோ, மாமன்னன், போன்ற சில படங்கள் வெற்றி பெற்றன. 2021 ஆம் ஆண்டு தன்னுடைய அரசியல் வருகையை உறுதி செய்த உதயநிதி ஸ்டாலின், 'மாமன்னன்' தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என்பதை அறிவித்தார். இந்த படத்தை 'பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் உதயநிதிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

89
Udhayanidhi Net Worth

Udhayanidhi Net Worth

 2021 ஆம் ஆண்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக மாறிய உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு துணை முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டபோது வேட்புமனு  தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய சொத்து விபரங்களை பிரமாண பத்திரத்தில் அறிவித்தார். அதில் உதயநிதி பெயரில் 26.67 கோடி சொத்து இருப்பதாக  அறிவிக்கப்பட்டிருந்தது.

இவரிடம், ரூ. 21 கோடியே 13 லட்சத்து 9 ஆயிரத்து 650 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.6 கோடியே 54,39,52 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் தன்னிடம் இருக்கும் ரேஞ்ச் ரோவர் காரின் மதிப்பு ஒரு கோடிக்கும் மேல் என தெரிவித்திருந்தார். கையில் ரொக்கமாக 75 ஆயிரம் இருப்பதாகவும் மொத்த வருமானம், 4 லட்சத்து 89 ஆயிரத்து 520 ரூபாய் என அறிவித்திருந்தார். 

99
CM Stalin Networth

CM Stalin Networth

முதல்வர் மு க ஸ்டாலின் சொத்து குறித்து விவரம் தெரிவித்த போது, ரூ.7.19 கோடி மட்டுமே தன்னிடம் சொத்துக்கள் உள்ளதாக கூறி இருந்தார். இதன் மூலம், தன்னுடைய தந்தை ஸ்டாலினை விட உதயநிதி மூன்று மடங்கு சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மு. க. ஸ்டாலின்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved