MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Pushpa Movie Box-office collection: அட்ராசக்க.. முதல் நாளே வசூலில் அடித்து நொறுக்கிய 'புஷ்பா'! இத்தனை கோடியா?

Pushpa Movie Box-office collection: அட்ராசக்க.. முதல் நாளே வசூலில் அடித்து நொறுக்கிய 'புஷ்பா'! இத்தனை கோடியா?

நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடிப்பில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான புஷ்பா திரைப்படம் (Pushpa movie Collection) வசூலில் அவரது முந்தைய படத்தின் வசூலை விஞ்சி கெத்துக்காட்டியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 18 2021, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் 5 மொழிகளில் டிசம்பர் 17 வெள்ளிக்கிழமை அதாவது நேற்றைய தினம் வெளியானது.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

ஓமிக்ரான் தொற்றின் பரபரப்புக்கு மத்தியில் இப்படம் வெளியானாலும், வசூலில் வேற லெவலுக்கு கெத்து காட்டியுள்ளது. தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்தப் படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் மட்டும் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

38

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படம் அவரது முந்தைய படமான ‘ஆல வைகுந்தபுரமுலு’ படத்தின் வசூலை முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்க்கு முன் இவர் நடித்த இப்படம் தான் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி முதல் நாளில் 36.83 கோடி ரூபாய் வசூல் செய்து அதிக வசூல் செய்த படமாக பார்க்கப்பட்டது.

 

48

ஆனால் நேற்று வெளியான இதன் 'புஷ்பா' படம் இதனை முறியடிக்கும் அளவுக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதால், அல்லு அர்ஜுன் கேரியரில் இன்று வரை அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘புஷ்பா’ பெற்றுள்ளது.

 

58

தெலுங்கானா மற்றும் ஆந்திர திரையரங்குகளில் 'புஷ்பா' திரைப்படம் ரூ.30 கோடி வசூலித்துள்ளது. மலையாளம், இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் என பல மொழிகளிலும் டப் வெளியிடப்பட்டதில் இருந்து ரூ. 5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

68

மொத்தத்தில் ரூ.40 கோடி வசூலை முதல் நாளே அள்ளியுள்ளது புஷ்பா திரைப்படம். அதே போல்  இப்படம்  நிஜாம் பகுதியில் 11.44 கோடி ரூபாய் வசூல் செய்து மற்றொரு சாதனையை படைத்துள்ளது.

 

78

முதல் நாளிலேயே அமோக வரவேற்பை பெற்றுள்ளதாலும் வார இறுதி நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பாராத வசூலை குவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

88

புஷ்பா படத்திற்கு சில நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் அல்லு அர்ஜுன் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.  அதே போல் மற்ற நடிகர் - நடிகைகளான ராஷ்மிகா மந்தனா, சுனில், மலையாள நடிகர் ஃபஹத் பாசில், பிரகாஷ் ராஜ், தனஞ்சய், ஜெகபதி பாபு மற்றும் அனசுயா பரத்வாஜ் ஆகியோரின் நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
யார் சொன்னா எம்ஜிஆர்னு.?! விஜய் ஒரு சுயம்பு தெரியுமா.?! போட்டுத்தாக்கும் சவுக்கு சங்கர்.!
Recommended image2
Jana Nayagan Day 6 Box Office : மளமளவென சரிந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்தித்த ஜனநாயகன்
Recommended image3
Jayamani Passes Away : சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி... 'மலேசியா மாமா' நடிகர் ஜெயமணி காலமானார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved