விஜய் வந்துட்டார்? அஜித் வருவாரா? - ‘தல’ தமிழ்நாட்லயே இல்லையாமே...!
வழக்கமாக காலையிலேயே வந்து வாக்களிக்கும் அஜித், இந்த முறை வாக்களிப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் நடிகர் அஜித் தற்போது தமிழ்நாட்டில் இல்லையாம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
திரைப்பிரபலங்களும் காலை முதலே வந்து ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் இன்று காலை 7 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் பள்ளியில் வாக்களித்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பேசுபொருளாக ஆன நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் சிவப்பு நிற சாண்ட்ரோ காரில் வந்து வாக்களித்தார்.
வழக்கமாக காலையிலேயே வந்து வாக்களிக்கும் அஜித், இந்த முறை வாக்களிப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் நடிகர் அஜித் தற்போது மும்பையில் உள்ளாராம். அவர் வாக்களிப்பதற்காக இன்று மாலைக்குள் தமிழகம் வருவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகர் அஜித் காலை 7 மணிக்கு முன்னதாகவே வந்து மக்களோடு மக்களாக நின்று வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் வருகிற பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அதேபோல் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள தல 61 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். போனி கபூர் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.