MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ajith salary :வலிமை தந்த மவுசு.. சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய அஜித்! AK 62 படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

Ajith salary :வலிமை தந்த மவுசு.. சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய அஜித்! AK 62 படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

Ajith salary : ஏ.கே.61 படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாத நிலையில், அஜித் அடுத்ததாக நடிக்க ஏ.கே.62 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. 

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Mar 23 2022, 12:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வசூல் வேட்டை நடத்திய வலிமை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. எச்.வினோத் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், வசூலை வாரிக் குவித்தது. இதனால் தயாரிப்பாளரும், படக்குழுவும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

ஏ.கே.61-க்கு தயாராகும் அஜித்

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ஏ.கே.61 படத்தை எச்.வினோத் தான் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒன்றி மங்காத்தா பாணியில் வில்லன் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இந்த வேடத்திற்காக நீளமான வெள்ளை நிற தாடி, காதில் கடுக்கன் என தோற்றத்தை மாற்றி நடிக்க தயாராகி வருகிறார் அஜித்.

34

விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைத்த அஜித்

ஏ.கே.61 படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாத நிலையில், அஜித் அடுத்ததாக நடிக்க ஏ.கே.62 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதன்படி நடிகை நயன்தாராவின் காதலனும், பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.

44

சம்பளத்தை உயர்த்திய அஜித்

இந்நிலையில், ஏ.கே.62 படத்துக்காக நடிகர் அஜித் தனது சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்துக்கு ரூ.55 கோடி சம்பளமாக வாங்கிய அஜித், தனது படங்கள் வரிசையாக வெற்றியடைந்து வருவதால் ஏ.கே.62 படத்தில் நடிக்க ரூ.100 கோடி சம்பளமாக கேட்டாராம். ஆனால் லைகா நிறுவனமோ அவர் கேட்டதை விட 5 கோடி ரூபாய் அதிகமாக கொடுத்து அஜித்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்... Maamanithan : மாமனிதன் மே 6-ந் தேதி ரிலீசாகாது.... ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டதால் ரசிகர்கள் குழப்பம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trisha : காதல் எப்போதும்... விஜய் முதல்வர் ஆன பின் த்ரிஷா போட்ட சூசக பதிவு - வைரலாக்கும் நெட்டிசன்கள்
Recommended image2
Karuppu முதல் Exam வரை... இந்த வாரம் தியேட்டர் & OTT-ல் செம மாஸாக ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
Recommended image3
Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved