- Home
- Cinema
- Ajith about Nerkonda Paarvai: 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தது ஏன்? அஜித் சொன்ன வேற லெவல் பதில்!
Ajith about Nerkonda Paarvai: 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தது ஏன்? அஜித் சொன்ன வேற லெவல் பதில்!
அஜித் (Ajith) நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை' (Nerkonda Paarvai) பாலிவுட் படமான 'பிங்க்' படத்தின் (Pink Movie) ரீமேக்காக எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடித்தது ஏன்? என்று நடிகர் அஜித் கூறியுள்ள வேற லெவல் பதில் தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் முதல் முறையாக நடித்திருந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் நடித்தது ஏன் என அஜித் கூறிய பதில் வைரலாகி வருகிறது.
'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ஹிந்தியில் 2016ஆம் ஆண்டு, வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டிருந்தது.
'பிங்க்' படத்தில், நடிகர் அமிதாப்பச்சன் ஏற்று நடித்திருந்த வக்கீல் வேடத்தில் தான் நடிகர் அஜித் நடித்திருந்தார். மேலும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், வித்யாபாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
எந்த ஒரு எதிர்மறையான விமர்சனங்களும் இல்லாமல், ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது மட்டும் இன்றி, பெண்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் திரையரங்குகளில் வசூலிலும் கெத்து காட்டியது.
இந்நிலையில் அஜித் இந்த வித்தியாசமான கதையை, ஏன் தேர்வு செய்து நடித்தேன் என்பதை தெரிவித்துள்ளார். இவரது வேற லெவல் பதில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "என் மகள் இந்த சமூகத்தில் தான் வாழ போகிறாள். இந்த சமூகத்தில் வாழும் ஒரு ஆண், ஒரு பெண்ணை எப்படி பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய படங்களில் பெரும்பாலும், வலிமையான பெண் கதாபாத்திரங்கள் இருந்தது இல்லை. ஒரு சமூகமாக நாம் உண்மையை பேசுவதற்கு பயப்படுகிறோம்' என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.