Aditi Shankar: வெள்ளை நிற சல்வாரில்.. டார்க் லிப்ஸ்டிக் போட்டு... தன்னை தானே வைரம் என வர்ணித்த அதிதி ஷங்கர்!
பிரமாண்ட இயக்குனரின் வாரிசான அதிதி ஷங்கர் (Aditi Shankar) தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக ஒரு ரவுண்டு வர தயாராகி வருகிறார். அவ்வப்போது கியூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது வெள்ளை நிற சல்வாரில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
யாருமே எதிர்பாராத சில விஷயங்கள் திரையுலகில் நடக்கிறது. அந்த வகையில் தான் இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் திடீர் என திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளது குறித்த தகவல் வெளியானது.
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்க உள்ள படத்தில் 'விருமன்' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது, அதில் செம்ம கியூட்டாக பாவாடை தாவணி அழகில் மின்னினார். இந்த ஒற்றை புகைப்படத்திலேயே... ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.
இதை தொடர்ந்து அவ்வப்போது இந்த படத்தில் நடிக்கும், இவரது கதாபாத்திரம் குறித்த தகவலும் வெளியாகி வருகிறது.
'விருமன்' படத்தில், மதுரை பெண்ணாக நடிக்கிறார். மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், தேன்மொழி என்கிற கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறாராம் அதிதி.
எம்.பி.பி.எஸ் படித்த பெண்ணாக இருந்தாலும், மதுரை தமிழில் சொல்லி கொடுத்தது போல் பேசி அசால்ட் செய்து வருகிறாராம்.
முதல் படம் வெளியான பின்னரே அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆக வேண்டும், என்பதில் உறுதியாக உள்ள அதிதி ஷங்கர் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற தாமரை போல்... வேறு லெவல் அழகில் ரெட் கலர் டார்க் லிப்ஸ்டிக் போட்டு தற்போது புதிய புகைப்படங்கள் சில வற்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, நான் வைரம் போன்று வலிமையானவள் என தன்னை தானே வர்ணித்துள்ளார். வைரலாக பார்க்கப்பட்டு வரும் அந்த புகைப்படங்கள் இதோ...