- Home
- Career
- மாதம் 1.25 லட்சம் வரை சம்பளம்.! தேர்வே இல்லை TN Rights திட்டத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ
மாதம் 1.25 லட்சம் வரை சம்பளம்.! தேர்வே இல்லை TN Rights திட்டத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ
தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் "TN Rights" திட்டத்தில் காலிப் பணியிடங்கள் உள்ளன. திட்ட மேலாளர் முதல் தட்டச்சர் வரை பல்வேறு பதவிகளுக்கு ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பிக்கலாம்.

ஒப்பந்த அடிப்படையில் வேலை
ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் கல்வியை முடித்து வேலை தேடி அலைந்து வருகிறார்கள். எனவே வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பல லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அடுத்ததாக அரசு பணியில் இணைபவர்களுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகம்
அந்த வகையில் 1.25 லட்சம் மாதம் சம்பளத்தில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் "TN Rights" திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 25 இடங்களுக்கு பணிபுரிய பணியாளர்கள்ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
உலக வங்கியின் நிதி உதவியுடன் மாநில முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தின் மாநில திட்ட மேலாண்மை பிரிவில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படவுள்ளனர். 25 காலிப்பணியிடங்களுக்கு வரும் ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
பணியாளர்களுக்கு சம்பள விவரம்
திட்ட மேலாளர் பதவிக்கு ரூ.1,25 வரை லட்சம் சம்பளம்
திட்ட அதிகாரி பதவிக்கு ரூ.75 ஆயிரம் சம்பளம்
சீனியர் கணக்காளர் பதவிக்கு மாதம் ரூ.35,000 சம்பளம்
உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.20,000
தட்டச்சர் பதவிக்கு மாதம் ரூ.15,000 சம்பளம்
கல்வி தகுதி என்ன.?
- திட்ட மேலாளர் பதவிக்கு கிராமப்புற மேம்பாடு அல்லது சார்ந்த படிப்புகளில் முதுகலைப் பட்டப்படிப்பு, சமூகப்பணி, சமூக அறிவியல், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு, மேம்பாட்டு ஆய்வுகள், முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- திட்ட அதிகாரி பதவிக்கு சமூகப்பணி, மனித வள மேலாண்மை, தொழில் நிர்வாகம், நிறுவன மேம்பாடு, சமூக ஆய்வு, கிராம நிர்வாகம், பொது கொள்கை, பொது நிர்வாகம், புள்ளியியல், நிதி சார்ந்த படிப்புகள் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- சீனியர் கணக்காளர் பதவிக்கு கணக்கியல் மற்றும் நிதி மேனேஜ்மெண்ட், பொது நிதி அல்லது தொழில் மேனேஜ்மெண்ட் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 1 ஆண்டு பணி அனுபவம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தட்டச்சர் பதவிக்கு கணினி பயன்பாடு பாடத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கல்வித்தகுதி, பணி அனுபவம், நேர்காணல் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tnrightsjobs.tnmhr.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பிக்கலாம்.