MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • TNPSC தேர்வர்களுக்கு 'ஸ்வீட்' நியூஸ்.. குரூப் 2 மறுதேர்வு தேதி இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TNPSC தேர்வர்களுக்கு 'ஸ்வீட்' நியூஸ்.. குரூப் 2 மறுதேர்வு தேதி இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னையில் தேர்வு மையங்கள் அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், மறு தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Feb 09 2026, 08:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
TNPSC தேர்வு
Image Credit : Asianet News

TNPSC தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அரசு வேலையில் சேர்ந்து வருகின்றனர்.

கடைசி நேரத்தில் ரத்தான தேர்வு

இதற்கிடையே சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர் பதவிகள் அடங்கிய குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்ப முதல்நிலைத் தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகின. 

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நேற்று (பிப்ரவரி 8) நடைபெற இருந்தது. ஆனால் சென்னையில் தேர்வு மையங்கள் அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
குரூப் 2 மறுதேர்வு தேதி இதுதான்
Image Credit : Google

குரூப் 2 மறுதேர்வு தேதி இதுதான்

இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு மார்ச் 15ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் 'நேற்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான (தொகுதி-II (ம) IIA பணிகள்) முதன்மைத் தேர்வின் இரண்டு தாள்களான -தாள்-I. தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் தாள்-II பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மறுதேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி, மார்ச் 15ம் தேதி காலை பொது அறிவு தாள் தேர்வு, பிற்பகலில் தமிழ் தகுதி, விரிவாக விடை அளிக்கும் தேர்வு நடைபெறும்.

Related Articles

Related image1
2026-ல் அரசு வேலை உறுதி.. இளைஞர்களுக்கு "குட் நியூஸ்".. TNPSC முதல் RRB வரை - முழு லிஸ்ட் இதோ!
Related image2
TNPSC Group 2: தவறவிடாதீர்கள்! குரூப் 2 தேர்வர்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு.! டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு.!
33
TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Image Credit : Google

TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேற்கண்ட தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) 28.022028-க்குள் தொடர்புடைய அனைத்து தேர்வர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) /குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

ஹால் டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?

எதிர்வரும் 22.02.2026 மு.ப. அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-IIக்கான முதன்மை தேர்வு வழக்கம்போல் அதே தேதியில் நடைபெறும். இதற்கான தகவல்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு 11.02.2026 அன்று வெளியிடப்படும். இது குறித்த அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) / குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி.என்.பி.எஸ்.சி.
தேர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
SBI Scholarship: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தகுதி இருந்தால் ரூ.15 லட்சம் வரை உதவித்தொகை.. அப்ளை பண்ணுங்க
Recommended image2
Railway Job: இந்திய ரயில்வேயில் 4,098 காலிப்பணியிடங்கள்! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image3
Govt Scheme: ரூ. 15 லட்சம் கொடுக்கும் அரசு.! நீங்களும் முதலாளியாக நேரம் வந்தாச்சு.! உடனே அப்ளை பண்ணுங்க.!
Related Stories
Recommended image1
2026-ல் அரசு வேலை உறுதி.. இளைஞர்களுக்கு "குட் நியூஸ்".. TNPSC முதல் RRB வரை - முழு லிஸ்ட் இதோ!
Recommended image2
TNPSC Group 2: தவறவிடாதீர்கள்! குரூப் 2 தேர்வர்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு.! டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved