- Home
- Career
- டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே! தப்பி தவறிகூட மறந்துடாதீங்க! இன்னும் இரண்டே தான் இருக்கு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே! தப்பி தவறிகூட மறந்துடாதீங்க! இன்னும் இரண்டே தான் இருக்கு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 645 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி.

தமிழ்நாடு அரசு பணியில் சேர்வது பல லட்சம் இளைஞர்களின் கனவாகவே உள்ளது. குறைந்த பணியாளர்கள் என்றாலும் இதற்காக இரவு பகல் பாராமல் தேர்விற்கு தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் குரூப் 4 தேர்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் 15ம் தேதி வெளியானது.
இதில் குரூப் 2 பணியில் உதவி ஆய்வாளர் 6 இடங்கள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்(மாற்று திறனாளி அல்லாதர்)-1, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்(மாற்று திறனாளிகள்) 1, நன்னடத்தை அலுவலர்-5, சார் பதிவாளர்(கிரேடு 2)- 6, வனவர் 22 இடங்கள் என மொத்தம் 50 இடங்கள் நிரப்பப்படுகிறது. அதேபோல் குரூப் 2ஏ பதவியில் பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டு துறை முதுநிலை ஆய்வாளர் 65 இடம், இந்து சமய அறநிலையத்துறையில் தணிக்கை ஆய்வாளர் 11, வணிக வரித்துறையில் உதவியாளர் 13, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் 40 என 31 துறையில் 595 இடங்கள் என மொத்தம் 645 பணியிடங்கள் நிரப்படுகிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வுக்கு இளங்கலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள் உள்ளிட்டோர் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும்.
முதல்நிலை தேர்வானது வரும் செப்டம்பர் 28ம் தேதியும், முதன்மை தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளது. இதனால் இன்று, நாளை, நாளை மறுநாள் என விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது.