- Home
- Career
- அரசு வேலை எப்போது கிடைக்கும்? தேதி குறிச்சாச்சு.. பிஜி டிஆர்பி & டெட் தேர்வர்களுக்கான பிரத்யேக அப்டேட்!
அரசு வேலை எப்போது கிடைக்கும்? தேதி குறிச்சாச்சு.. பிஜி டிஆர்பி & டெட் தேர்வர்களுக்கான பிரத்யேக அப்டேட்!
TN TRB பிஜி டிஆர்பி பணி நியமனம், டெட் விடைக்குறிப்பு மற்றும் 2026 தேர்வு கால அட்டவணை எப்போது வெளியாகும்? ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முக்கிய அப்டேட்கள் இதோ.

TN TRB ஆசிரியர் தேர்வு வாரியம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் தேர்வுகளுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக முதுகலை ஆசிரியர் (PG TRB), கல்லூரி உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதியவர்கள் அடுத்தகட்ட நகர்வுக்காக ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முக்கிய அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த நம்பத்தகுந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PG TRB) பணி நியமனம் எப்போது?
நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இறுதித் தேர்வுப் பட்டியல் (Final Selection List) இந்த வாரம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. அதாவது, ஜனவரி 15 முதல் ஜனவரி 20-ம் தேதிக்குள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படலாம். இதனைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, அவர்கள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெட் (TET) விடைக்குறிப்புகள் எப்போது?
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதிய தேர்வர்கள் விடைக்குறிப்புக்காகக் (Answer Key) காத்திருக்கின்றனர். இவர்களுக்கான விடைக்குறிப்புகள் இந்த மாத இறுதிக்குள், அதாவது ஜனவரி 30-ம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடைக்குறிப்புகள் வெளியானதும், அது தொடர்பான ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்குத் தேர்வர்களுக்கு அவகாசம் வழங்கப்படும்.
ஆண்டுத் தேர்வுத் திட்டம் (Annual Planner) ரிலீஸ் தேதி
தேர்வர்கள் அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பது டி.ஆர்.பி-யின் வருடாந்திர தேர்வுத் திட்டமிடல் (Annual Planner) தான். 2026-ம் ஆண்டிற்கான தேர்வுத் திட்டம் ஜனவரி 13 (நாளை) முதல் ஜனவரி 23-ம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தத் திட்டமிடலில் வட்டாரக் கல்வி அலுவலர் (BEO), இடைநிலை ஆசிரியர் (SGT), பட்டதாரி ஆசிரியர் (BT Assistant), முதுகலை ஆசிரியர் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்ற விவரங்கள் இடம்பெறும். எனவே, தேர்வர்கள் தங்கள் தயாரிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டிய நேரம் இது.

