டிகிரி முடிச்சிருந்தா போதும்.. மத்திய அரசு வங்கியில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியா முழுவதும் 400 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டதாரிகள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

பேங்க் ஆஃப் இந்தியா வேலை
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான 'பேங்க் ஆஃப் இந்தியா' (Bank of India) இந்தியா முழுவதும் காலியாக உள்ள 400 அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதிகள் மற்றும் வயது வரம்பு
• கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (Any Degree) பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
• வயது வரம்பு: 01.12.2025 அன்று விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
• வயது தளர்வு: அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை மற்றும் ஊக்கத்தொகை
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (Online Test) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் மற்றும் கணினி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு ஒரு மணி நேரம் நடைபெறும்.
தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ. 13,000 ஊக்கத்தொகையாக (Stipend) வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
• பொதுப் பிரிவினர்: ரூ. 800
• மாற்றுத் திறனாளிகள்: ரூ. 400
• எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.01.2026

