- Home
- Career
- திருநெல்வேலி அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 119 சமையல் உதவியாளர் பணியிடங்கள்! முழுவிவரம்….
திருநெல்வேலி அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 119 சமையல் உதவியாளர் பணியிடங்கள்! முழுவிவரம்….
திருநெல்வேலி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 119 சமையல் உதவியாளர் வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும். தகுதி, கடைசி தேதி மற்றும் விண்ணப்ப விவரங்களை இங்கே பார்க்கவும்.

Tirunelveli Tamilnadu Anganwadi Recruitment 2025
திருநெல்வேலி மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் 119 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த வேலைக்குத் தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 2025 ஏப்ரல் 26. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதலில் தொகுப்பூதியமாக ரூ.3,000 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு, சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 - ரூ.3000-9000) ஊதியம் வழங்கப்படும்.
Tamilnadu Anganwadi Recruitment 2025 – Vacancy
காலிப்பணியிட விவரங்கள்:
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 119. இதில் அரசு மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 79 இடங்களும், சிறுபான்மை பள்ளிகளில் 40 இடங்களும் உள்ளன. இனசுழற்சி வாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம் மற்றும் முஸ்லீம் தவிர), மற்றும் பொதுப் பிரிவினருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Tamilnadu Anganwadi Recruitment 2025- Eligibility
விண்ணப்ப தாரர்களுக்கான தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் 15.04.2025 அன்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பதாரர்கள் 15.04.2025 அன்று 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, இருப்பிடம், சாதி, விதவை/கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் இதர முன்னுரிமைகள் கோருவதற்கான சான்றுகளை இணைக்க வேண்டும். நியமனம் கோரும் பணியிடத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் (ஊராட்சி/குக்கிராமம்/வருவாய் கிராமம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது). ஆதரவற்ற விதவைகள் / ஆதரவற்ற பெண் / கணவரால் கைவிடப்பட்டோருக்கான பணியிடங்கள் நிரப்பப்படும்போது 25% இடங்கள் ஒதுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீடும் அரசாணைப்படி வழங்கப்படும்.
Tamilnadu Anganwadi Recruitment 2025 – Application Process
சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவம் திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் (www.tirunelveli.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 2025 ஏப்ரல் 26, பிற்பகல் 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர).
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் அழைப்பு கடிதம் அனுப்பப்படும். நேர்காணலின்போது அசல் அழைப்பு கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
- அங்கன்வாடி வேலைவாய்ப்பு: சொந்த ஊரிலே வேலை ! விண்ணபிப்பது எப்படி? முழு விவரம்
- சென்னை அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025: 308 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்…
- கள்ளக்குறிச்சியில் அங்கன்வாடி வேலை வாய்ப்பு! 10th, 12th முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!
- தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: சொந்த ஊரிலே வேலை! உடனே விண்ணப்பிக்கவும்…