MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: சொந்த ஊரிலே வேலை! உடனே விண்ணப்பிக்கவும்…

தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: சொந்த ஊரிலே வேலை! உடனே விண்ணப்பிக்கவும்…

தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: நேரடி நியமனத்திற்கு உடனே விண்ணப்பிக்கவும்!

2 Min read
Suresh Manthiram
Published : Apr 08 2025, 09:53 PM IST| Updated : Apr 28 2025, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
thoothukudi

thoothukudi

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அட்மிஷன்-2025 ஆரம்பம்: என்ன கோர்ஸ்லாம் இருக்குனு பாருங்க!

26

மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் மொத்தம் 88 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களும், 44 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான வட்டார வாரியான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள் மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும்.

36

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 7, 2025 முதல் ஏப்ரல் 23, 2025 வரை, அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக 10 அலுவலக வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரடையாக சமர்ப்பிக்க வேண்டும்.

46
Anganwadi

Anganwadi

ஊதியம் மற்றும் தகுதிகள்:

தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படும் பணியாளர்கள் 12 மாதங்கள் பணிபுரிந்த பின்னர் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் வருவர். அங்கன்வாடி பணியாளருக்கு மாதம் ரூ.7700, குறு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.5700 மற்றும் அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ.4100 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சியும், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

56

வயது வரம்பு அறிவிப்பு வெளியான தேதியின் முதல் நாளின்படி கணக்கிடப்படும். பொதுப் பிரிவினருக்கு 25 முதல் 35 வயது வரையிலும், விதவைகள்/ஆதரவற்ற பெண்கள்/எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 25 முதல் 40 வயது வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரையிலும் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

66
anganwadi

anganwadi

இருப்பிட முன்னுரிமை:

காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமம் அல்லது ஊராட்சி அல்லது அருகிலுள்ள ஊராட்சி அல்லது மாநகராட்சி/நகராட்சி/நகர பஞ்சாயத்து வார்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்களின் முழு விவரங்கள் https://thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும்போது உரிய விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் இதர தேவையான ஆவணங்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். நேர்காணலின்போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  தூத்துக்குடி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பங்குனி உத்திர திருநாள் விடுமுறை? - முழுமையான விவரங்கள்!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
அரசு வேலை
ஆட்சேர்ப்பு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved