- Home
- Career
- Training: இது நிஜமாவே இளைஞர்களுக்கு ஜாக்பாட் தான்! சென்னையில் மென்பொருள் பயிற்சி! எப்போ தெரியுமா?
Training: இது நிஜமாவே இளைஞர்களுக்கு ஜாக்பாட் தான்! சென்னையில் மென்பொருள் பயிற்சி! எப்போ தெரியுமா?
சென்னை கிண்டி தேசியத் திறன் பயிற்சி நிறுவனம், மெக்கானிக்கல் துறை இளைஞர்களுக்காக Master Cam மென்பொருள் பயிற்சியை வழங்குகிறது. ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் இந்தப் பயிற்சியில் 2D/3D மாடலிங் மற்றும் CNC புரோகிராமிங் கற்றுத்தரப்படும்.

இனி நீங்களம் மெக்கானிக்கல் துறையில் ஜொலிக்கலாம்
இன்றைய வேகமான இயந்திர உலகில், வெறும் பட்டம் மட்டும் போதாது. கையில் ஒரு அட்டகாசமான தொழில்நுட்பத் திறனும் இருக்க வேண்டும். குறிப்பாக உற்பத்தி மற்றும் மெக்கானிக்கல் துறையில் ஜொலிக்க விரும்புவோருக்கு, சென்னை கிண்டி தேசியத் திறன் பயிற்சி நிறுவனம் ஒரு செம்ம செய்தியை அறிவித்துள்ளது. வரப்போகும் ஜனவரி 5-ம் தேதி முதல் தொடங்கவுள்ள Master Cam மென்பொருள் பயிற்சி, உங்கள் கரியரில் ஒரு பெரிய ஜாக்பாட்டாக அமையப் போகிறது. இதனை பயன்படுத்திக்கொண்டால் எளிதாக வேலைகிடைக்கும் கைநிறைய சம்பளத்துடன்.
பயிற்சியின் சிறப்பம்சங்கள்
மத்திய அரசின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும் இந்தப் பயிற்சி, உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களைக் கற்றுத் தருகிறது. 2D மற்றும் 3D மாடலிங் மூலம் பாகங்களை வடிவமைத்தலை துல்லியமாக கற்றுக்கொள்ளலாம். CNC புரோகிராமிங் முறையில் நவீன இயந்திரங்களை இயக்கும் முறைகளை நேரடிச் செய்முறை மூலம் கற்கலாம். அனுபவம் வாய்ந்த வல்லுநர்களால் வழங்கப்படும் நேரடி வகுப்புகள் மெக்கானிக்கல் துறையில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளமுடியும்.
பயிற்சி மற்றும் கட்டண விபரங்கள்
இந்தக் குறைந்த காலப் பயிற்சி, உங்கள் வேலைவாய்ப்புத் திறனை பன்மடங்கு உயர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவரம்தகவல்பயிற்சி காலம்ஜனவரி 5 முதல் ஜனவரி 9 வரை என்பதால் அதனை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.பயிற்சிக்கான கட்டணம் 2,500 ரூபாய் வரை இருக்கும். பயிற்சி நடக்கும் இடம் NSTI, கிண்டி, சென்னை - 32. SC/ST மற்றும் பெண்கள் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி கட்டணச் சலுகைகள் உண்டு. துல்லியமான கட்டண விபரத்தை அலுவலகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
கூடுதல் விவரங்கள் இங்கே கிடைக்கும்.!
இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் அல்லது கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர் கீழே உள்ள முகவரியையோ அல்லது தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.
அலுவலக முகவரி
தேசியத் திறன் பயிற்சி நிறுவனம் (NSTI),
சி.டி.ஐ வளாகம், கிண்டி, சென்னை - 600032.
தொடர்பு எண்: 044-22501211 / 044-22501511
இணையதளம்: www.nstichennai.dgt.gov.in
இளைஞர்கள் தவறவிடக்கூடாது
அரசு சான்றிதழுடன் கூடிய இத்தகைய தொழில்முறைப் பயிற்சிகள் கிடைப்பது ஒரு அரிய ஜாக்பாட் வாய்ப்பு. தனியார் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து கற்கும் மென்பொருளை, மிகக் குறைந்த கட்டணத்தில் கற்கும் இந்த செம்ம வாய்ப்பை இளைஞர்கள் தவறவிடக்கூடாது. இப்போதே முன்பதிவு செய்து, உங்கள் எதிர்காலத்தை அட்டகாசமாக மாற்றிக் கொள்ளுங்கள்!

