MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • IT Jobs: ஐடி துறையில் சம்பளப் புரட்சி.! புதியவர்களுக்கு ரூ. 21 லட்சம் வரை ஆஃபர்.! சம்பளம் விஷயத்தில் தாராளம் காட்டும் இன்போசிஸ்!

IT Jobs: ஐடி துறையில் சம்பளப் புரட்சி.! புதியவர்களுக்கு ரூ. 21 லட்சம் வரை ஆஃபர்.! சம்பளம் விஷயத்தில் தாராளம் காட்டும் இன்போசிஸ்!

இந்திய ஐடி துறையில், இன்போசிஸ் தனது AI First திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 21 லட்சம் வரை தொடக்க சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Dec 31 2025, 07:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மீண்டும் ஐடி துறையில் சம்பள புரட்சி
Image Credit : Gemini

மீண்டும் ஐடி துறையில் சம்பள புரட்சி

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில்  நீண்ட காலமாக நிலவி வந்த குறைந்த ஆரம்பக்கட்ட சம்பளம் குறித்த கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னணி நிறுவனமான இன்போசிஸ் ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தனது AI First திட்டத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 21 லட்சம் வரை தொடக்க சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. இந்த அறிவிப்பு இளைஞர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

2025-ஆம் ஆண்டு படிப்பை முடிக்கும் மாணவர்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய புத்தாண்டு பொங்கல் பரிசாக இது பார்க்கப்படுகிறது.

24
நினைத்தே பார்க்க முடியாத சம்பளம்.!
Image Credit : stockPhoto

நினைத்தே பார்க்க முடியாத சம்பளம்.!

கடந்த பத்தாண்டுகளாக ஐடி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளம் 800 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்த நிலையில், ஆரம்பக்கட்ட ஊழியர்களின் சம்பளம் மிக மெதுவாகவே உயர்ந்து வந்தது. இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், இன்போசிஸ் தற்போது தனது சம்பள விகிதங்களை அதிரடியாக மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக, ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் பிரிவில் பணியமர்த்தப்படும் எல்-3 (L3) நிலை பயிற்சிப் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 21 லட்சமும், எல்-2 (L2) நிலைக்கு ரூ. 16 லட்சமும், எல்-1 (L1) நிலைக்கு ரூ. 11 லட்சமும் ஆண்டு வருமானமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஐடி துறையில் புதிய அத்தாயம் பிறப்பதாக கூறப்படுகிறது. இளைஞர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றனர்.

Related Articles

Related image1
Job Alert: பட்டதாரிகளுக்கு பொற்கால வாய்ப்பு.! ரயில்வே அமைச்சக பிரிவுகளில் 311 காலிப்பணியிடங்கள்.! விண்ணப்பிப்பது எப்படி.?!
Related image2
TNPSC Group 2: தவறவிடாதீர்கள்! குரூப் 2 தேர்வர்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு.! டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு.!
34
 20,000 புதியவர்களை பணியமர்த்த இன்போசிஸ் இலக்கு
Image Credit : Getty

20,000 புதியவர்களை பணியமர்த்த இன்போசிஸ் இலக்கு

இந்த நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 20,000 புதியவர்களை பணியமர்த்த இன்போசிஸ் இலக்கு வைத்துள்ளது. இதில் முதற்கட்டமாக 12,000 பேர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களை அடுத்த சில மாதங்களில் நிரப்ப அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் வளாகத்திற்கு வெளியே ஆள்சேர்ப்பு முகாம்களை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக், எம்.சி.ஏ மற்றும் கணினி அறிவியல் சார்ந்த எம்.எஸ்.சி பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
 இது இளைஞர்களுக்கான ஜாக்பாட்
Image Credit : Getty

இது இளைஞர்களுக்கான ஜாக்பாட்

தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் கடும் போட்டிக்கு மத்தியில், திறமையான இளைஞர்களை  கவரும் வகையில் இன்போசிஸ் எடுத்துள்ள இந்த முடிவு மற்ற ஐடி நிறுவனங்களையும் இது போன்ற சம்பள உயர்வை வழங்க தூண்டும் என்றால் அது மிகயல்ல. டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் பணிகளுக்குக் குறைந்தபட்சமாக ரூ. 7 லட்சம் முதல் சம்பளம் தொடங்குகிறது என்பதால் இது இளைஞர்களுக்கான ஜாக்பாட். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் கூடுதல் விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC Group 2: தவறவிடாதீர்கள்! குரூப் 2 தேர்வர்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு.! டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு.!
Recommended image2
எக்ஸாம் தேதி மாறிடுச்சு.. படிக்க இன்னும் டைம் இருக்கு! 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்!
Recommended image3
சீட் மாறினால் தேர்வு ரத்து? கடுமையாகும் விதிமுறைகள்.. UGC NET எழுதப் போறீங்களா? இதை படிங்க ஃபர்ஸ்ட்!
Related Stories
Recommended image1
Job Alert: பட்டதாரிகளுக்கு பொற்கால வாய்ப்பு.! ரயில்வே அமைச்சக பிரிவுகளில் 311 காலிப்பணியிடங்கள்.! விண்ணப்பிப்பது எப்படி.?!
Recommended image2
TNPSC Group 2: தவறவிடாதீர்கள்! குரூப் 2 தேர்வர்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு.! டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved