- Home
- Career
- ரூ.18,500 முதல் 58,600 வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி? சென்னை தியாகராஜர் கோவிலில் வேலை!
ரூ.18,500 முதல் 58,600 வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி? சென்னை தியாகராஜர் கோவிலில் வேலை!
திருவொற்றியூரில் உள்ள புகழ்பெற்ற தியாகராஜ சுவாமி கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை 10 காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மாதம் ரூ.58,600 வரை சம்பளத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி கோயில்
சென்னை திருவொற்றியூரில் புகழ்பெற்ற தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. மாதம் சம்பளம் மற்றும் கல்வித்தகுதி, விண்ணப்பிப்பது எப்படி உள்ளிட்ட விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பணியிடங்கள் விவரம்
இளநிலை உதவியாளர் - 02, எழுத்தர் - 01 , அலுவலக உதவியாளர் - 01, காவலர் - 04, வேத பாராயணம் - 01, உதவி சமையலர் (சுயம்பாகம்) - 01 என மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வயது வரம்பு
கல்வித் தகுதி
இளநிலை உதவியாளர் மற்றும் வசூல் எழுத்தர் பணிகளுக்கு 10ம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதர பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். உதவி சமையலர் (சுயம்பாகம்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக கோயில் மரபுகளின்படி பிரசாதம் மற்றும் நிவேதனம் தயாரிக்கத் தெரிந்திருப்பது அவசியம்.
வயது வரம்பு
இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாதம் சம்பளம் விவரம்
இளநிலை உதவியாளர் மற்றும் வசூல் எழுத்தர் பணிகளுக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரையும், அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணிகளுக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையும், வேத பாராயணம் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளமும், உதவி சமையலர் (சுயம்பாகம்) பணிக்கு ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பிக்கும் முறை
விருப்பம் உள்ளவர்கள் https://hrce.tn.gov.in/என்ற இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
உதவி ஆணையர் /செயல் அலுவலர். அருள்மிகு தியாகராஜகசுவாமி திருக்கோவில், திருவொற்றியூர், சென்னை - 1
விண்ணப்பிக்க கடைசி நாள்
2026 ஜனவரி 30

