- Home
- Career
- தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு! டிகிரி முடித்தால் போதும் கை நிறைய சம்பளம்!
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு! டிகிரி முடித்தால் போதும் கை நிறைய சம்பளம்!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு ரூ.8,64,000 வரை சம்பளம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 20.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு தற்போது இந்தியா முழுவதும் 572 கிளைகள் உள்ளன. 12 பிராந்திய அலுவலகங்கள், 13 விரிவாக்க கவுண்டர்கள், 1094 ஏடிஎம் மையங்களை கொண்டுள்ளது. இந்த வங்கி இந்தியா முழுவதும் தனது கிளைகளை விரிவுபடுத்தி வருகிறது.
புரொபேஷனரி அதிகாரி
இந்நிலையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு கல்வித் தகுதி மற்றும் சம்பளம் என்ன என்பதை பார்ப்போம்.
புரொபேஷனரி அதிகாரி
புரொபேஷனரி அதிகாரி (Selected as a Senior Customer Service Executive (SCSE). மொத்தம் எத்தனை பணியிடங்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
வயது வரம்பு
கல்வித் தகுதி
இந்த பணியிடத்திற்கான கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும். முதுகலை பட்டம் பெற்றிருந்தால் 30 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்
பயிற்சி திட்டத்தின் (Course Program) போது ஆண்டுக்கு ரூ. 3,56,000 சம்பளம் வழங்கப்படும். கிளாஸ் ரூம் டிரெயினிங்கின் போது மாதம் ரூ 5 ஆயிரம் வழங்கப்படும். இண்டெர்ன்ஷிப் காலத்தில் மாதம் ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். பணி பயிற்சியின் போது மாதம் ரூ.48,000 கிடைக்கும். பணியிடம் ஒதுக்கப்பட்ட பிறகு ஆண்டுக்கு ரூ.8,64,000 சம்பளமாக கிடைக்கும். புரோகிராம் கட்டணமாக ரூ.2,80,000- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 36 மாதங்கள் நிறைவடைந்த பிறகு இதில் பாதியளவு கட்டணம் திருப்பி தரப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
தேர்வு செய்யப்படும் முறை
ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் https://tmb.manipalbfsi.com/sesc-program/ இணையதளத்தில் இந்த பயிற்சி திட்டம் குறித்த தெளிவான மற்றும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தேர்வு அறிவிப்பினை ஒருமுறைக்கு இருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பிறகு தேர்வர்கள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க வரும் 20.08.2025 கடைசி நாளாகும்.
விண்ணப்பக் கட்டணம்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க எந்தக் கட்டணமும் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி
ஆகஸ்ட் 20