11th Exam : தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து.? பள்ளிக்கல்வித்துறை என்ன சொல்கிறது? முழு விபரம்
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது.
தமிழகத்தில் நடந்து முடிந்த கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டிற்கு தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது.
நடப்பு கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருக்காது. மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்காக 11-ம் வகுப்பு பாடங்களையே நடத்தாமல் 12 ஆம் வகுப்பு பாடங்களை நேரடியாக தனியார் பள்ளிகள் எடுத்து வந்த காரணத்தினால் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பால் ஆசிரியர்களும், மாணவர்களும் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர். ஆனால் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து என்று பரவும் தகவல் உண்மையில்லை.
கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு ஆலோசனையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்றும் பள்ளி கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
வட்டார கல்வி அலுவலர் காலியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு