- Home
- Career
- Special TET Exam : ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு ..TRB அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள்
Special TET Exam : ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு ..TRB அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள்
Special TET Exam : பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் (TET) தேர்வு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பம், கடைசி தேதி, தேர்வுக் கட்டணம், பணிச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஆசிரியர்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வு
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது பணித் தகுதியை உறுதிப்படுத்துவதற்காகக் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மற்றொரு முக்கியமான வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் (TET) தேர்வில் இதுவரை தேர்ச்சி பெறாத பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் வகையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சிறப்புத் தேர்வை நடத்துகிறது.
அதன்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு வருகிற டிச.20 ஆம் தேதி நடைபெறும் என்றும் இதற்கு இன்று (அக்டோபர் 27) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.
தேர்வு எப்போது நடைபெறும்? தாள் 1, தாள் 2 தேர்வுகள் எந்த நேரத்தில் நடைபெறும்? விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்குகிறது? விண்ணப்பிக்கக் கடைசி தேதி என்ன? ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.
டெட் தேர்வு 2026
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் (TET) தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
மேலும், இச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தொடர்ந்து பணியாற்றுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், இதில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தோல்வி அடைந்தனர்.
இந்நிலையில், தோல்வி அடைந்த பணிபுரியும் ஆசிரியர்களுக்குகான சிறப்பு டெட் தேர்வு தேர்வு வருகிற டிச.20 ஆம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.
சிறப்பு டெட் தேர்வு 2026
முக்கிய தேதிகள்
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தேர்வு நடைபெறும் நாள் : 20 டிசம்பர், 2026
காலை - தாள் 2 தேர்வு (பட்டதாரி ஆஅசிரியர்கள் தேர்வு)
பிற்பகல் - தாள் 1 தேர்வு (இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு)
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: 27 அக்டோபர் 2026
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 19 நவம்பர் 2026
விண்ணப்பத் திருத்தம்: 20–22 நவம்பர் 2026
தமிழ்நாட்டில் பணியில் இருந்துகொண்டே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய ஆசிரியர்களுக்காக இந்தச் சிறப்புத் தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
1. TRB இணையதளத்திற்குச் செல்லவும்.
2. பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு TNTET தேர்வு அறிவிப்பைத் திறக்கவும்.
3. விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்படும் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பணிவிவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
4. அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவேற்றவும்.
5. பொருந்தும் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
6. விண்ணப்ப உறுதிப்படுத்தல் நகலைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பம் தொடங்கும் நாள், கடைசி நாள், பணிச் சான்றிதழ், தேர்வுக் கட்டணம் போன்ற விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் சரிபார்த்து விண்ணப்பிப்பதே சிறந்தது.

