அடி தூள்.! ஒரே நாளில் 15ஆயிரம் பேருக்கு வேலை.! குஷியான அறிவிப்பை வெளியிட்ட அரசு
வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. 250க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 15,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில் வேலை வாய்ப்பு
தமிழகத்தில் வேலை இல்லாதவர்கள் இருக்க கூடாது என்பதற்காக பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவு ஈர்த்தும் தமிழகத்தில் தொழில் தொடங்கவும் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. எனவே சொந்த ஊரில் வேலை இல்லாமல் வெளியிடங்களுக்கு வேலையை தேடி செல்லும் நிலையை தவிர்க்கும் வகையில் சொந்த ஊரில் வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தி வருகிறது.
எனவே தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிறிய நிகரங்களிலும் தொழில் நிறுவனங்களை தொடங்கப்பட்டு வருகிறது. இதனால் சொந்த ஊரை விட்டு வெளியூரில் வெளியிடங்களுக்கு செல்வது பெரிதும் தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கோவையில் வேலைவாய்ப்பு
அந்த வகையில் தொழில் நகரம் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 23,08,2025 சனிக்கிழமை காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி, கோவையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள் என்ன.?
250 க்கும் மேற்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
15000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள்,
கல்வித்தகுதிகள்
எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் etc
அனுமதி இலவசம்
மேலும் விவரங்களுக்கு
துணை இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோயம்புத்தூர்
: 0422 2642388, 94990 55937
www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவுசெய்யும் வழிமுறை