5000 பேருக்கு ரெடியா இருக்கு வேலை.! ஒரே நாளில் அப்பாயிண்ட் ஆர்டர்-சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 5,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. 8ஆம் வகுப்பு முதல் எந்த பட்டப்படிப்பு முடித்தவர்களும் கலந்துகொள்ளலாம்.

கொட்டிக்கிடக்கும் வேலை
தமிழகத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டும், வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் தொழல் தொடங்கவும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் பல ஆயிரம் நிறுவனங்கள் தமிழகத்தில் பல இடங்களில் தங்களது நிறுவனங்களை அமைத்து வருகிறது. இதன் காரணமாக சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
இந்த நிலையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி, வந்தவாசி இணைந்து நடத்துகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாம் (13ஆம் தேதி ) நாளை நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் நடைபெறவுள்ள இந்த முகாமில் எந்த வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
5,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.
அனைத்து கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் வரவும்.
விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio- Data) ஆகியவற்றுடன் நேரில் கலந்துக் கொள்ளவும்
கல்வி தகுதி என்ன.?
கல்வித்தகுதிகள்
8,10, +2, ITI, Diploma Any UG/PG,B.E., B.Tech
வேலைவாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் திருவண்ணாமலை - 606604 தொடர்புக்கு : 04175-233381
வயது வரம்பு: 18 வயது முதல் 35 வரை..
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தாங்கள் கலந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.