MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Career
  • NCRTC Recruitment 2026: டிப்ளமோ, ITI படித்தவர்களுக்கு செம வாய்ப்பு! ரூ.1.15 லட்சம் சம்பளம்..90 அரசு வேலைகள்!

NCRTC Recruitment 2026: டிப்ளமோ, ITI படித்தவர்களுக்கு செம வாய்ப்பு! ரூ.1.15 லட்சம் சம்பளம்..90 அரசு வேலைகள்!

 NCRTC Recruitment 2026-க்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு என்ன? சம்பளம் எவ்வளவு? தேர்வு மற்றும் பணியாளர் தேர்வு முறை எப்படி இருக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழுமையான விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Asianet News
Published : Sep 15 2026, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மத்திய அரசு வேலை
Image Credit : pinterest

மத்திய அரசு வேலை

ரயில்வே மற்றும் மெட்ரோ துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (National Capital Region Transport Corporation – NCRTC) சார்பில் Supervisor-I மற்றும் Junior Maintainer பணிகளுக்கு 90 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 9, 2026

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
காலிப்பணியிடங்கள்
Image Credit : pinterest

காலிப்பணியிடங்கள்

NCRTC Recruitment 2026-ன் கீழ் மொத்தம் 90 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Supervisor-I பணிக்கு 62 காலியிடங்களும், Junior Maintainer பணிக்கு 28 காலியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி

Supervisor-I (Operations) பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து முழுநேர Engineering Degree அல்லது Engineering Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Supervisor-I (Electronics, Electrical, Mechanical மற்றும் Civil) பணிகளுக்கு, சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவில் 3 ஆண்டுகள் முழுநேர டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

அதேபோல், Junior Maintainer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான குறிப்பிட்ட கல்வித் தகுதியை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.

Related Articles

Related image1
Govt job : தேர்வு எழுதாமலே அரசு வேலை..10-ம் வகுப்பு போதும்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Related image2
Job News: வங்கி வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.! ரூ.85,920 வரை சம்பளம்.! 2,482 காலிப்பணியிடங்கள்.!
36
வயது வரம்பு
Image Credit : pinterest

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு 10.09.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.மேலும், அரசு விதிமுறைகளின்படி தகுதியுள்ள SC, ST, OBC, PwD உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.

அதன்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு கிடைக்கும். மேலும், PwBD (General/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படுகிறது.

46
சம்பளம் எவ்வளவு?
Image Credit : pinterest

சம்பளம் எவ்வளவு?

Supervisor-I பணிகளுக்கு S1 Pay Scale – ரூ.37,000 முதல் ரூ.1,15,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. Junior Maintainer பணிகளுக்கு NS3 Pay Scale – ரூ.18,250 முதல் ரூ.59,200 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் NCRTC விதிமுறைகளின்படி தகுதியான கொடுப்பனவுகள் மற்றும் பிற சலுகைகளும் கிடைக்கும்.

56
விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit : pinterest

விண்ணப்பிப்பது எப்படி?

NCRTC Recruitment 2026 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன், NCRTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ncrtc.co.in மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 10.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2026

விண்ணப்பக் கட்டணம்:

NCRTC Recruitment 2026-க்கு விண்ணப்பிக்கும் SC/ST, முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwD) ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

66
தேர்வு முறை
Image Credit : pinterest

தேர்வு முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக Computer Based Test (CBT) தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்தத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். முக்கியமாக, CBT தேர்வில் எதிர்மறை மதிப்பெண் (Negative Marking) கிடையாது.

CBT தேர்வில் தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக மருத்துவத் தகுதிப் பரிசோதனை (Medical Fitness Test) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவார்கள். இந்தச் செயல்முறைகள் முடிந்த பின்னர், விதிமுறைகளின்படி இறுதி தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்.

About the Author

AN
Asianet News
Asianet News is a trusted name in Indian journalism, known for delivering accurate, timely, and impactful news. With decades of experience, we excel in covering regional, national, and international stories, ensuring our readers stay informed about the topics that matter most.Whether through breaking news, investigative features, or nuanced opinion pieces, Asianet News remains your reliable source for comprehensive and credible content.Stay connected with Asianet News for stories that matter
வேலை வாய்ப்பு
அரசு வேலைவாய்ப்பு இணையதளம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்! 5% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு!
Recommended image2
8th Pay Commission: கடைசி சம்பளத்தில் 67% பென்ஷன்! LPD குறித்து அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கை!
Recommended image3
GDS Recruitment: தபால் துறையில் 25,000+ வேலைகள்! 10ஆம் வகுப்பு போதும், தேர்வு இல்லாமல் வேலை!
Related Stories
Recommended image1
Govt job : தேர்வு எழுதாமலே அரசு வேலை..10-ம் வகுப்பு போதும்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Job News: வங்கி வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.! ரூ.85,920 வரை சம்பளம்.! 2,482 காலிப்பணியிடங்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved