பி.டெக். படித்தவர்களுக்கு கடற்படையில் வேலை! இன்னைக்கே அப்ளை பண்ணுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
இந்திய கடற்படையில் 10+2 பி.டெக் கேடட் என்ட்ரி ஸ்கீம் மூலம் சேர்வதற்கான விண்ணப்ப அவகாசம் இன்றுடன் (ஜனவரி 19, 2026) முடிவடைகிறது. JEE Main 2025 தேர்வில் பங்கேற்ற, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 44 காலியிடங்களுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

இந்தியக் கடற்படையில் சேர
இந்திய கடற்படையில் 10+2 பி.டெக் கேடட் என்ட்ரி ஸ்கீம் (Permanent Commission) கீழ் சேர விரும்புவோருக்கான விண்ணப்ப கால அவகாசம் இன்றுடன் (ஜனவரி 19, 2026) நிறைவடைகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கிய விவரங்கள்
• பயிற்சி மையம்: எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமி.
• காலியிடங்கள்: மொத்தம் 44 இடங்கள் (எக்ஸிகியூட்டிவ் மற்றும் டெக்னிகல் பிரிவுகள்). இதில் பெண்களுக்கு அதிகபட்சமாக 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
• வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் ஜனவரி 2, 2007 மற்றும் ஜூலை 1, 2009 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
• 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
• 10 அல்லது 12-ம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
• JEE Main 2025 தேர்வில் பங்கேற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். JEE Main ஆல் இந்தியா தரவரிசைப் பட்டியலின் (CRL) அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு முறை
1. தரவரிசைப் பட்டியல்: JEE Main மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
2. SSB நேர்காணல்: பெங்களூரு, போபால், கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய மையங்களில் மார்ச் 2026 முதல் நேர்காணல் நடைபெறும்.
3. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். நேர்காணல் மையம் அல்லது தேதியை மாற்ற அனுமதி இல்லை.
விண்ணப்பிக்கும் முறை
• www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
• புதிய பயனராகப் பதிவு செய்து, 'Dashboard' மூலம் உள்நுழையவும்.
• JEE Main 2025 தரவரிசை விவரங்கள் உட்பட அனைத்துத் தகவல்களையும் துல்லியமாக நிரப்பவும்.
• சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், JEE ஸ்கோர்கார்டு மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றவும்.
• விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் சரிபார்த்து, எதிர்காலத் தேவைக்காக ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
குறிப்பு: ஒரு விண்ணப்பதாரர் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முழுமையற்ற அல்லது தெளிவற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

