ராணுவத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு! என்ஜினியரிங் படிச்சவங்க இதை விட்றாதீங்க!
இந்திய ராணுவத்தில் 67-வது தொழில்நுட்பப் பிரிவு (SSC Tech) அக்டோபர் 2026 பேட்ச்சிற்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 379 காலிப் பணியிடங்களுக்கு திருமணமாகாத ஆண், பெண்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராணுவத்தில் தொழில்நுட்ப பணி
இந்திய ராணுவத்தில் 67-வது தொழில்நுட்பப் பிரிவு (SSC Tech) ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான அக்டோபர் 2026-ஆம் ஆண்டு பேட்ச் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று (ஜனவரி 7, 2026) முதல் தொடங்கியுள்ளது.
முக்கிய விவரங்கள்
• காலிப் பணியிடங்கள்: 379 (ஆண்கள் - 350, பெண்கள் - 29).
• கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் சில நிபந்தனைகளுடன் விண்ணப்பிக்கலாம்.
• வயது வரம்பு: அக்டோபர் 1, 2026 அன்று 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 1, 1999 முதல் செப்டம்பர் 31, 2006-க்குள் பிறந்திருக்க வேண்டும்.
• திருமண நிலை: திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுக்கு ஏற்பக் கீழ்க்கண்டவாறு சம்பளம் வழங்கப்படும்:
• லெப்டினன்ட் (Lieutenant): ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை.
• கேப்டன் (Captain): ரூ. 61,300 முதல் ரூ. 1,93,900 வரை.
• மேஜர் (Major): ரூ. 69,400 முதல் ரூ. 2,07,200 வரை.
• லெப்டினன்ட் கர்னல்: ரூ. 1,21,200 முதல் ரூ. 2,12,400 வரை.
• இதைத் தவிர இதர உயரிய பதவிகளுக்கு ரூ. 2,25,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindianarmy.nic.in வழியாக விண்ணப்பிக்கலாம்.
1. இணையதளத்திற்குச் சென்று 'Registration' லிங்கை கிளிக் செய்யவும்.
2. தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து பதிவு செய்யவும்.
3. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
4. எதிர்காலத் தேவைக்காக விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: பெண்கள் பிப்ரவரி 4 வரையிலும், ஆண்கள் பிப்ரவரி 5 வரையிலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் பயிற்சிக்கான வகுப்புகள் அக்டோபர் 2026-இல் பிரீ-கமிஷனிங் டிரைனிங் அகாடமியில் (PCTA) தொடங்கும்.

