- Home
- Career
- Bank Job : ரூ.85,920 வரை சம்பளத்துடன் ஜம்முனு பேங்க் வேலைக்கு போகணுமா... இந்த சூப்பர் சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க
Bank Job : ரூ.85,920 வரை சம்பளத்துடன் ஜம்முனு பேங்க் வேலைக்கு போகணுமா... இந்த சூப்பர் சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க
IBPS எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், நாடு முழுவதும் உள்ள அரசு வங்கிகளில் 6715 புரொபேஷனரி ஆபிசர்/மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

IBPS PO Recruitment 2026
வங்கி வேலை கனவில் இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு. IBPS எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection), நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரங்கள்:
நிறுவனம்: வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)
பணியிடங்களின் எண்ணிக்கை: 6715
பணியின் பெயர்: புரொபேஷனரி ஆபிசர்/ மேனேஜ்மென்ட் டிரெய்னி
பணியிடம்: இந்தியா முழுவதும்
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வேலைக்கு தகுதி என்ன?
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சம் 30 வயதும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
ஓபிசி பிரிவினருக்கு: 03 ஆண்டுகள்
எஸ்சி/எஸ்டி/ESM பிரிவினருக்கு: 05 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD): 10 ஆண்டுகள்
இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வாகும் நபர்களுக்கு ஆரம்பத்திலேயே மாதம் ₹48,480 முதல் ₹85,920 வரை சிறப்பான சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)
முதன்மைத் தேர்வு (Main Exam)
நேர்காணல் (Interview)
விண்ணப்பக் கட்டணம்:
SC/ ST/ PwBD பிரிவினருக்கு: ரூ. 175
மற்ற அனைத்து பிரிவினருக்கும் (General/OBC/EWS): ரூ. 850
விண்ணப்பிப்பது எப்படி?
முதலில், அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அறிவிப்பை முழுமையாகப் படிக்கவும்.
உங்கள் சமீபத்திய புகைப்படம், கையொப்பம், இமெயில் ஐடி மற்றும் தேவையான கல்விச் சான்றிதழ்களைத் தயாராக வைத்திருக்கவும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் விண்ணப்பத்தை சரியாகப் பூர்த்தி செய்யவும்.
https://ibpsreg.ibps.in/crppoxvijun26/
உங்கள் பிரிவுக்கு ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, 'Submit' பட்டனை கிளிக் செய்யவும்.
எதிர்காலத் தேவைக்காக விண்ணப்பப் படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜூலை 01, 2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 21, 2026
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஜூலை 21, 2026

