- Home
- Business
- July Bank Holidays: ஜூலையில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த நாட்கள்? முழு லிஸ்ட் இதோ
July Bank Holidays: ஜூலையில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த நாட்கள்? முழு லிஸ்ட் இதோ
July Bank Holidays: ஜூலை மாதத்தில் வங்கிகளில் முக்கிய வேலை இருந்தால் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. ஏனென்றால் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பல நாட்கள் வங்கி கிளைகள் செயல்படாது.

July 2026 Bank Holiday List:
ஜூலை மாத வங்கி கிளைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், முதலில் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். அடுத்த மாதத்தில் நாடு முழுவதும் பல நாட்கள் வங்கி கிளைகள் செயல்படாது. இதனால் காசோலை டெபாசிட், கேஒய்சி புதுப்பித்தல், டிமாண்ட் டிராஃப்ட், லாக்கர் சேவை உள்ளிட்ட கிளை சார்ந்த பணிகள் தாமதமாகும். எனவே முன்கூட்டியே திட்டமிடுவது வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
12 நாள் வங்கிகள் மூடப்படும்
வங்கி கிளைகள் மூடப்பட்டாலும், பெரும்பாலான டிஜிட்டல் சேவைகள் வழக்கம்போல் இயங்கும். இணைய வங்கி, மொபைல் பேங்கிங், யுபிஐ, ஏடிஎம் பணப் பரிமாற்றம், பில் கட்டணம் மற்றும் இருப்பு சரிபார்த்தல் போன்ற சேவைகளை எந்த தடையும் இல்லாமல் பயன்படுத்த முடியாது. அதனால் அன்றாட பரிவர்த்தனைகளில் பெரிதாக சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை.
ஜூலை வங்கி ஹாலிடே லிஸ்ட்
அதே நேரத்தில், மாநில வாரியாக அறிவிக்கப்படும் உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான விடுமுறைகள் ஜூலை மாதத்தில் இடம்பெறுகின்றன. இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவை அல்ல. எனவே வேறு மாநிலத்தில் உள்ள வங்கி கிளைக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், அந்த மாநிலத்தின் விடுமுறை பட்டியலை முன்கூட்டியே சரிபார்ப்பது அவசியம்.
ஜூலை வங்கி விடுமுறை
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி விதிகளின்படி ஜூலை மாதம் 11-ம் தேதி (2-வது சனி) மற்றும் 25-ம் தேதி (4-வது சனி) நாடு முழுவதும் அனைத்து வங்கி கிளைகளும் மூடப்பட்டிருக்கும். மேலும் ஜூலை 5, 12, 19 மற்றும் 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் இயங்காது.
உள்ளூர் விடுமுறைகள்
இதனுடன், மாநிலங்களுக்கு ஏற்ப மேலும் 6 உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்தமாக ஜூலை மாதம் 12 நாட்கள் வங்கி கிளைகள் செயல்படாது. எனவே வங்கி கிளையில் நேரடியாக செய்ய வேண்டிய முக்கிய பணிகள் இருந்தால், விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு முன்கூட்டியே முடித்துக்கொள்வது தேவையற்ற சிரமங்களை தவிர்க்க உதவும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

