- Home
- Career
- Bank of Baroda Jobs: சம்பளம் ரூ.1.20 லட்சம் வரை! பேங்க் ஆஃப் பரோடாவில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்! தேர்வு எழுத தேவையில்லை!
Bank of Baroda Jobs: சம்பளம் ரூ.1.20 லட்சம் வரை! பேங்க் ஆஃப் பரோடாவில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்! தேர்வு எழுத தேவையில்லை!
Bank of Baroda: பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேலாளர், மூத்த மேலாளர், மற்றும் தலைமை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி, சம்பள விவரங்களை பார்க்கலாம்.

பேங்க் ஆப் பரோடா
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பேங்க் ஆப் பரோடா வங்கி. இந்தியாவிலேயே பாரத் ஸ்டேட் வங்கிக்கு பின்னர் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். 9,693 கிளைகளுடன் 74,227க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி, சம்பளம், தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட விவரங்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 04, மூத்த மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 38 , தலைமை மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 01, மூத்த மேலாளர் - C & IC ரிலேஷன்ஷிப் - 36 , தலைமை மேலாளர் - C & IC ரிலேஷன்ஷிப் - 07 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் நிதியியல் துறையில் முதுநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். CA, CMA, CS அல்லது CFA தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் பணியாற்றி இருப்பது ரொம்ப முக்கியம்.
மாதம் சம்பளம் எவ்வளவு?
* MMG/S - II: ரூ.64,820 முதல் ரூ.93,960, SMG/S-IV: ரூ. 85,920 முதல் ரூ. 1,05,280, SMG/S-IV: ரூ. 102,300 முதல் ரூ. 120,940
வயது வரம்பு
மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 25 முதல் 30 வயதும், மூத்த மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 28 முதல் 35 வயதும், தலைமை மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 32 முதல் 42 வயமட், மூத்த மேலாளர் - C & IC ரிலேஷன்ஷிப் - 28 முதல் 35 வயதும், தலைமை மேலாளர் - C & IC ரிலேஷன்ஷிப் - 32 முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
வயது வரம்பு
மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 25 முதல் 30 வயதும், மூத்த மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 28 முதல் 35 வயதும், தலைமை மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 32 முதல் 42 வயமட், மூத்த மேலாளர் - C & IC ரிலேஷன்ஷிப் - 28 முதல் 35 வயதும், தலைமை மேலாளர் - C & IC ரிலேஷன்ஷிப் - 32 முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
யாருக்கெல்லாம் வயது தளர்வு
எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் (PwD - பொதுப் பிரிவு): 10 ஆண்டுகள், (PwD - OBC): 13 ஆண்டுகள், (PwD - SC/ST): 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்
தேர்வு முறை
நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவோர் இந்தியா முழுவதும் உள்ள வங்கி கிளைகள் மற்றும் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்
பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.175 ஆகவும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 6ம் தேதிக்குள் பேங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://bankofbaroda.bank.in/) வழங்கப்பட்டுள்ள 'Careers' பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
